பக்கம்:வைதேகியார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3103 6.ஸ்ரீராமபிரானாரும் பிராட்டியாரும் நோக்கினால் சந்தித்தல் ஒருகால் கௌசிக முனிவர் தசரதரிடம் வந்து, தம் வேள்வியைக் காத்தற்பொருட்டு ஸ்ரீராமபிரானைத் தம்முடன் அனுப்புமாறு கேட்டனர். ஆகவே, சக்கரவர்த்தியாரின் அருமை மக்களாகிய இராமரும் இலக்குமணனும் தம் தந்தையாரிடம் பிரியா விடை கொண்டு விசுவாமித்திரரைப் பின் தொடர்ந்தனர். அவ்வமயம் சிறிதுங் கருணையின்றிப் பல்லுயிர்களையும் வதைத்துக்கொண்டிருந்த தாடகையை ஸ்ரீராமர் அடித்து னர். இமைகள் கண்களைக் காப்பதுபோன்று, சகோ தார் இருவரும் முனிவர் வேள்வியை மிக்க கருத்துடன் காத்தனர். இராகவருடைய அம்பு அவ்வேள்வியை அழிக்க வந்த மாரீசன் முதலிய அரக்கர்களை முதுகு காட்டியோடச் செய்தது. சுபாகு அவர் வாளுக்கிரையானான். அவரது தெய்வத் தன்மை வாய்ந்த திருவடி மகிமையினால் கல்லுருப் பெற்றிருந்த அகலிகை பெண்ணுருவைப் பெற்றனள். இம் முறையில் சக்கரவர்த்தியாரின் திருமகனாரால் ஆகவேண்டிய இன்றியமையாத காரியங்கள் பல முடிந்தன.ஆனால்,இன் னும் இரண்டொன்று மிகுதியாக இருந்தன : அவைகளில் முதன்மையானது வில்லிறுத்துப் பிராட்டியாரை மணப்ப தாகும். முனிவர் ஸ்ரீராமபிரானாரைத் தசரதரிடமிருந்து அழைத்து வந்ததன் காரணங்கள் பலவற்றில் இதுவே தலை அவ்விரு சகோதரரும் முனிவரைப் பின் தொடர்ந்து மிதிலை நகரின் ராஜ வீதியில் நடக்கலாயினர். அந்நகரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/19&oldid=1563338" இலிருந்து மீள்விக்கப்பட்டது