பக்கம்:வைதேகியார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வைதேகியார் காட்சி அவர்கள் கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந் தது. வீதி, நீட்சியும் விசாலமும் பெற்றுத் தூய்மையுற் றிருந்தது. இருமருங்கும் பளிங்கு மண்டபங்களைப் போன்ற மாளிகைகள் வெண்சுதையினால் தீட்டப்பட்டிருந்தன. அவை களில் மக்களுக்கு மகிழ்வையூட்டும் அநேக சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. அத்தெரு,சிறு இரைச்சலுமின்றி அமைதியுற்றிருந்தது. வண்டி முதலியன செல்வதற்குத் தனி வழி இருந்தமையின், பாதையில் நடப்பவர் யாதொரு துன்பமுமின்றிச் செல்வாராயினர். ஒவ்வொரு வீட்டின் முன் புறத்திலுமிருந்த வாழை, கமுகு, பூங்கொடிகள் முதலி யன அம்மாளிகைகளைப் பெரிதும் அழகுபடுத்தின. அவ் வில்லங்களின் முன் கதவுகள் பொன்னாலாய சித்திரங்களினால் ஒளிர்ந்தன ; முன் கூடங்கள் அநேக அழகிய பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாளிகையின் முன் சுவரிலும் தலைவரின் பேர் பொறிக்கப்பட்டிருந்தது. அண் ணாந்து பார்த்தாலன்றி அம்மாளிகைகளின் முழுப்பாகத்தை யும் காண முடியாவளவு அவைகள் உயர்ந்திருந்தன. அவை களின்மேல் நாட்டப்பட்ட வெண்துகிற் கொடிகள் வானளாவி விளங்கின. அவைகள் மேகக் கூட்டங்களினால் நனைவதும், அங்குண்டாகும் அகிற்புகையினால் உலர்வதுமாக இருந்தன. அவைகள் வருவோரைக் குதுகுலத்துடன் வரவேற்பவை போல அசைந்தன. பொன், முத்து, இரத்தினம், யானைத் தந்தங்கள் முதலியவற்றைக் குவியல் குவியலாகக் குவித்து விற்கும் ஆவணத் தெருக்களின் வழியே அவர்கள் செல்லல் நேர்ந்தது. மகளிர் கந்துகம் (பந்து) விளையாடுமிடங்களையும், மலர் கொய்யும் பூஞ்சோலைகளையும், மக்கள் வாட்பயிற்சி செய்யும் இடங்களையும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்ணுற்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/20&oldid=1563340" இலிருந்து மீள்விக்கப்பட்டது