பக்கம்:வைதேகியார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீராமபிரானாரும் பிராட்டியாரும் நோக்கினால் சந்தித்தல் 17 சிறிது வழி நடந்தவுடன் ஜனகர் அரண்மனை காணப் பட்டது. அதன் கம்பீரமும், அழகும், காவலும் சொல்லி லடங்குந் தகைமையுடையனவல்ல. மற்ற மாளிகைகளினும் அது வேறுபட்டதும், தலைமையுற்றதுமென்பதை அதன் தோற்றமே நன்கு விளக்கியது. பின்பு அவர்கள் கன்னி மாடத்தை அணுகினார்கள். அக்கன்னி மாடத்தின் அமைப் பும், சிறப்பும் அவர்கள் மனத்தைக் கவர்ந்தன. அம்மாடத் தின் நிலா முற்றத்தில் பூங்கொம்பைப் போன்ற பெண் மணி கள் பலர் குழுமி விளையாடிக்கொண்டிருந்தனர். அவ்விளை யாட்டொலி, காகுத்தர் செவிகளில் நுழைந்து, அவர் கண்களை அங்கு இழுத்தது.உடனே அவர் அம்மாடத்தின்மேல் தம் நோக்கைச் செலுத்தினார். ஆனால், அவர் அவ்வீதியை அடையும்போது கன்னி மாடத்தையும், ஆங்குறையும் பெண் களையும் குறித்து ஒரு சிறிதும் நினைத்தவரல்லர். அவர் அத் துணை விஷயங்களில் மனஞ் செலுத்தும் இயல்பு வாய்ந்தவரு மல்லர். அங்ஙனமிருந்தும், அவர் பார்வை அவ்விடம் சென் றது தெய்வச் செயலேயாகும். இது நிற்க. , வீரமும் கொடுமையும் வாய்ந்த இராவணனால் சிறையி லிடப்பட்ட குற்றமற்ற தேவ மகளிர் பல்லோரையும் சிறை மீட்கவே வந்து தோன்றிய பிராட்டியார், நலத்தில் ஒப்புயர் வற்ற தோழிகளுடன் அக்கன்னி மாடத்தில் உலாவிக்கொண் டிருந்தனர். என்றுமில்லாத ஓர் இன்பம் அன்று அவர் மனத்தை ஊக்கியது; இடக்கண் துடித்தது; முகம் ஆநந்தத் தினால் பொலிந்தது. அவர் தோழிகளுடன் மிக உல்லாச மாய்ப் பேசத் தலைப்பட்டனர். எந்நாளுமில்லாத ஒரு புதிய உணர்ச்சி தமக்குத் தோன்றுவதாக அவர் கருதினர். ஒரு சிறந்த அநுபவத்தில் தம் மனஞ் செல்வதாக அவருக்கு ஓர் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/21&oldid=1563483" இலிருந்து மீள்விக்கப்பட்டது