பக்கம்:வைதேகியார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வைதேகியார் எண்ணம் தோன்றிற்று. அவ்வமயத்தில் திடீரென அவர் விழிகள் வீதியை நோக்கின. அம்மையாரும் சாலையைப் பார்க்க வேண்டுமென்னும் எண்ணத்துடன் பார்த்தவரல்லர். காகுத்தர் மாடியை நோக்கியதும், மைதிலியார் சாலையை நோக்கியதும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. இம்முறையில் கட்டமைந்த வில்லைத் தாங்கிய ஆடவரிற் சிறந்த ஸ்ரீராமபிரா னார் நோக்குக் கற்பணியாகிய சீதா பிராட்டியாரின்மேற் பாய்ந்தது. அன்னையார் பார்வையும் காகுத்தர் மாட்டுத் தோய்ந்தது. இருவர் நோக்கும் ஒன்றோடொன்று கலந்து குலாவின. இங்ஙனம் இருவரும், நோக்கெனும் பாசத் தாற் கட்டுண்டனர். ஒருவர் மனத்தை மற்றொருவர் மனம் ஈர்த்ததனால், இராமர் மனத்தில் ஜானகியார் மனமும், ஜான கியார் மனத்தில் இராமர் மனமும் மாறிப் புக்கன. அவ்விருவரும் தத்தம் எண்ணங்களை ஒருவருக்கொரு வர் தெரிவித்துக்கொள்ள இயலாத நிலைமையிலிருப்பினும், அவர்தம் கண்கள் விஷயங்களைப் பேசித் தீர்மானித்துக் கெ கொண்டன. இதற்கு, " கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில. திருவள்ளுவர் என்னும் பொய்யா மொழியே தக்க சான்றாகும். இதை முனிவரும் தம் தம்பியும் எங்கு உணர்ந்துவிடு வரோ என்னும் அச்சம் காகுத்தரைக் கலக்கியது. ஆதலின், சீதா பிராட்டியாரிடம் பதிந்த மனத்தைத் தம் வசப்படுத்த அவர் பெரிதும் முயன்றார்.ஆயினும், அம்முயற்சி பய னற்றதாயிற்று.இம்முறையில் அவர் உடல் மாத்திரம் முனி வரைத் தொடர்ந்ததேயன்றி, அவர் மனம் பிராட்டியாரிடமே கலந்து நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/22&oldid=1565645" இலிருந்து மீள்விக்கப்பட்டது