பக்கம்:வைதேகியார்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீராமபிரானாரும் பிராட்டியாரும் நோக்கினால் சந்தித்தல் 19 அங்ஙனம் போதருகின்ற அவர், "யான் அக்கன்னி மாடத்திற் கண்ட பூங்கொடியையொத்த அவ்வழகி, தெய் வப் பெண்ணோ! திசைமுகனால் பலநாளும் ஆராய்ந்து படைக் கப்பட்ட வனப்பின் திரட்சியோ! அன்றி, மானிட மகள் தானோ! இந்நாட்டின் அரசன் அரும்புதல்வியோ! அமைச் சன் திருமகளோ! தோழி வகுப்பைச் சார்ந்தவளோ! யாரோ அறியேன்! யாராயினும், என்ன! அழகுகள் யாவும் செயற் கரிய தவஞ்செய்தே அவளையடைந்தன போலும்! நற்குணங் கள் யாவும் அவளிடம் ஒருங்கே திரண்டனவென அவள் பார்வை தூய குணங்களை வெளிப்படுத்துகின்றது. ஒரு போதும் என்னை எதிர்த்திலாதாரும் கேட்டஞ்சும் என் வீரத்தை, அம்மங்கையின் பார்வை ஓர் இமைப் போதில் குலைத்துவிட்டதே! என் செய்வது! என்றுமில்லாத சம் பவம் ஏன் இன்று நிகழ்ந்தது! என் நோக்கு எதற்காக மேற் செல்லல் வேண்டும்! நோக்கினாற்றானென்னை!அம்மாதின் என் மனம் பதிதல் ஏற்றுக்கு! அவள் கன்னி மா லிருப்பதால், கன்னியாகவே இருக்கலாம்; ஆயினும், அவள் என்னையே மணப்பாளென நினைத்தல் யாங்ஙனம் இயலும்! முனிவர் என்னை இந்நாட்டிற்கு அழைத்து வந்ததன் கார ணம் யாதோ! யான் அறியேன், எனச் சிந்தித்துக் கொண்டே வழி நடந்தனர். இங்ஙனம் பலவாறு யோசித்துக்கொண்டே சென்ற இராமபிரானார் திருவுருவம் தம் கண்களை விட்டகன்றவுடன், பிராட்டியாரின் மனம் அனலிடைப்பட்ட மெழுகென உரு கிற்று. அவர் கண்கள் இரவி குல திலகர் சென்ற வழியையே நோக்கிக்கொண்டிருந்தன. தம் நோக்கை வேறு பக்கம் திருப்ப அன்னையார் பெரிதும் முயன்றார். அம்முயற்சியினால் ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/23&oldid=1565646" இலிருந்து மீள்விக்கப்பட்டது