பக்கம்:வைதேகியார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 20 வைதேகியார் அவர், தம் பார்வையை மாற்றினரேயன்றி, தம் எண்ணத் தை மாற்ற அவரால் முடியவில்லை.ஆதலால்,"இவர் யார் ! இவர் ஏன் இங்கு வந்தார்! ஒருகால் நமக்காக ஏற்படுத்தி இருக்கும் வில்லைப் பார்க்க வந்தனரோ! இவர் அரச குமார ராக இருப்பரா! அங்ஙனமாயின், முனிவர் பின் வருவதற்குக் காரணம் யாது! அவர் பின் இன்னொரு பூமானும் தொடர்ந்து சென்றனரே! அவர் யாராயிருத்தல் கூடும்!" என்னும் பல எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அவருக்குதித்தன. "எதைக் கருதி என் மனம் அவர்பால் சென்றது!வில்லை வளைக்க என் தந்தையாரிடம் வருகின்ற மன்னவர் எண்ணி லர் என்பதை யான் அறிவேன். அவர்கள் வீரம், செல் வம், அழகு முதலியவைகளையும் தோழிகள் என்னிடம் குறிப்பிப்பதுண்டு. அங்ஙனமிருந்தும், என் மனம் அவர் களுள் ஒருவரிடத்திலும் பதிந்து தளர்ச்சி அடைந்ததில்லை யே! இதுகாறும் மணம் என்னும் எண்ணமே என் சிந்தை யில் உண்டானதாக எனக்கு நினைவில்லையே! இன்று எனக்கு உண்டான உணர்ச்சி எனக்கே வியப்பைத் தருகின்றதே! யான் இவ்வாறும் என் மனத்தைத் தளரவிடலாமா ! இவ்வ ளவு மன வன்மையற்றவளா யான்! இதை யாரேனும் அறி யின், என் கூறுவர்? என் மன மயக்கத்தைப் பற்றி உலகம் பழியாதோ! என்னை அறியாமலே அவர்பால் சென்ற என் மனம் இப்போது ஏதோ ஒரு பெருங்குறையை அடைந்த தைப் போன்று வருந்துகிறதே!முன்னிருந்த களங்க மற்ற தன்மையும், இன்பமும் இப்போது என்னை விட்டு நீங் கினவே! இதைப் பிறரறியாமல் மறைக்கவும் என்னால் முடி யாதுபோலிருக்கிறதே! யான் அவரையே மணப்பதென்றா லும், அஃது என் எண்ணத்தினாலேயே கூடுமா! அவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/24&oldid=1565647" இலிருந்து மீள்விக்கப்பட்டது