பக்கம்:வைதேகியார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீராமபிரானாரும் பிராட்டியாரும் நோக்கினால் சந்தித்தல் 21 என்னை விரும்புதல், பிரம்மசாரியாதல், வில் வளைத்தல் முத லிய காரியங்களும் முடிந்தாலன்றோ என் வேட்கை நிறை வேறும்! இவைகளில் ஒன்று தவறினும், என் எண்ணம் பாழா மன்றோ! பின் அவரை விட்டு மற்றொருவரை மணத்தல் என் கற்பிற்கிழுக்கன்றோ! ஆயினும்,என்ன! அவரை விட்டு வேறொருவரை மனத்தினாலேனும் நினைத்தாலன்றோ கற் பிற்குக் குற்றம் ! மணந்தால் அவரையே மணப்பேன் ; இன் றேல், ஆயுள் மட்டும் கன்னியாகவே இருந்து காலங் கழித் தலே கடைசித் தீர்மானம். ஏன் இவ்விரதங் கொள்ளல் என்னால் கூடாது! பெண்டிர் யாவருக்குமே இஃது இயலும். தம் மனத்தை மாத்திரம் திடப்படுத்துவரேல், பெண்டிர் இதைவிடச் சிறந்த காரியங்களையுஞ் செய்வர். இதனாலன்றோ சான்றோர் பெண்களைப் பெரிதும் புகழ்ந்து கூறுகின்றனர்! 66 பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்?" - திருவள்ளுவர் " எங்ஙனமேனும் அத்தலைவரைப் பற்றிய விஷயங்கள் யாவும் தெரியுமுன் என் சிந்தை ஒரு விதத்தெளிவிற்கும் வாராது,' என்று ஆழ்ந்த யோசனையிற் படிந்திருந்தனர். இம்முறையில், பிராட்டியார் தம் மனத்துள் அடக்க வேண்டிய பெண்மைக் குணங்களை அடக்க வன்மையற்றவ ராயினார். அதனால், அவர் குறிப்பைத் தோழிகளும் ஒரு வாறு உணர்தல் ஆயிற்று. தோழியர், 'இவர் மனத் திட்பத் தையும், நிறையையும் யாரோ ஓர் ஆண் மகன் கவர்ந்து சென்றனன் போலும்!' என ஐயுற்றனர். இங்ஙனம் இராமரும் பிராட்டியாரும் கொண்ட காதலே இயற்கைக் காதலாகும். இத்தகையோர்க்கு அமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/25&oldid=1565648" இலிருந்து மீள்விக்கப்பட்டது