பக்கம்:வைதேகியார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வைதேகியார் ள மணமே தெய்வ மணமெனப்படும். இவர் தம் உடல்இவ்வுலகை விட்டு நீங்கும்வரை ஒருவரைவிட்டொருவர் பிரியார். ஏன்? இறந்த பின்னும் ஒருவர் மாட்டு மற்றொருவர்க்குள்ள இத் தகைய அன்பு நீங்காதெனவே கூறலாம். அன்பினாற் பிணிக் கப்பட்டவர்களாய், ஒருவர் கருத்தை மற்றொருவர் நன் குணர்ந்து மிக்க ஒற்றுமையுடன் ஒழுகும் இல்லறவாழ்க்கை சுவர்க்கத்திலும் சிறந்ததாகும். துறவறம் இதன்முன் என் செய்யும்? இங்கு, " அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. திருவள்ளுவர் என்னும் பெரியார் வாக்கு நினைவிற்கு வருகிறது. ஒத்த வயதும், ஒத்த பண்பும்,ஒத்த அறிவும், ஒத்த அன்பும் மண மக்களுக்கு இன்றியமையாதனவென நூல்கள் அறையாநிற்கின்றன. ஆயினும், இவைகள் யாவற்றிலும் சிறந்தது ஒத்த அன்பேயாகும். இஃதுண்டேல், மற்றவை தாமே வந்து சேரும். இத்தகைய பண்புடையார்களுக்குத் தோன்றும் மக்களல்லவா உண்மை மக்களாவார்கள்! அம்மக் கள் சான்றோராய்த் திகழ்வதற்கும், உலக சேவையி லீடுபடுவ தற்கும் தடையுளதோ? இதனால் ஏற்படும் நலன்களை அளந்து கூறல் இயலாது! அப்போதன்றோ உலகம் மேன்ன யடையும்! இக்காலத்தில் சிலர் கல்வியையும், சிலர் செல்வத் தையும், சிலர் ஜாதியையும் கவனிக்கின்றனரேயன்றி, ஒத்த குணத்தையும் அன்பையும் யோசிக்கின்றனர் இல்லை. ! மை நம் நாட்டில் பெண் பாலாரும், ஆண் பாலாரும் அடை கின்ற துன்பங்கள் பலவற்றிற்கும் அன்பின்மையே காரண மாகும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை செய்யும் காரணங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். இதனாலன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/26&oldid=1565649" இலிருந்து மீள்விக்கப்பட்டது