பக்கம்:வைதேகியார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ற காகுத்தர் வில்லை முறித்தல் 23 இப்போது வீரம், நிறை, கற்பு, ஒழுக்கம், கல்வி, அறிவு, தேக திடம், மன வன்மை முதலிய யாவற்றிலும் குறைபாடு டைய மைந்தர் பலர் தோன்றுகின்றனர்? ஆனால், நம்மனோரிற் சிலர் மேல் நாட்டாரைப் போன்று ஒருவரோடொருவர் சில நாட்கள் உறவாடிப் பழகிய பின் மணஞ் செய்தல் நலம் என்ற கொள்கையையும் கொண்டுள்ளனர். அம்முறை யும் இக்காலத்திற்கேற்றதன்று எனவே கூறல் வேண்டும். ஏனெ னனில், அதற்கேற்ற கல்வியும், உலக அநுபவமும் நம் நாட்டில் இருபாலாரிடத்திலும் மிகவும் குறைவு. எந்நாள் ஊதியத்திற்கும், கீர்த்திக்குந்தான் கல்விகற்பது என்னும் நினை வுமாறி, மனத்தைச் சீர்மைப்படுத்தி வாழ்க்கையை நேர்வழி யில் நடாத்தி நாட்டை முன்னேறச் செய்வதற்கே கல்வி கற் பது என்னும் எண்ணம் தோன்றுகின்றதோ, அந்நாளே நம் நாடு நலம் பெறும் நன்னாளாகும். இத்தகைக் கல்வி இருபா லாருக்கும் இருத்தல் வேண்டும். இதை விரிக்கிற் பெருகும். 7. காகுத்தர் வில்லை முறித்தல் முன்னர் இயம்பிய வண்ணம் காதலர் இருவரும் கலக்கமுற்றனர்; இராமரின் உரு வெளித் தோற்றம் சீதா பிராட்டியாரையும், பிராட்டியாரின் உரு வெளித் தோற்றம் இராமரையும் பெரிதும் துன்புறுத்தின. அவர்களுக்கு அவ்விரவு ஒரு யுகம்போலத் தோன்றிற்று. அதை அவர்கள் தங்கள் உயிரை ஈர்க்கும் பகைவனென நினைத்தார்கள். ஈதிங் ஙனமிருக்க, காலச் சோதரன் யாரையும் எதிர் பார்க்க மாட் டானன்றோ? துன்பங் கொண்டவர்களுக்குக் குறைந்தும், இன்பம் வகித்தவர்களுக்கு மிகுந்தும் தோன்றுவது அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/27&oldid=1565650" இலிருந்து மீள்விக்கப்பட்டது