பக்கம்:வைதேகியார்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வைதேகியார் தொழிலல்லவே? தம் வேலையைச் சிறிதும் தவறாமல் செய் கின்றவர்களில் அவனும் ஒருவனல்லவா? ஆகவே, அவர்களை வருத்திய இரவுங் கழிந்து, பகலவன் தோன்றினான். அன்று அவன் புறப்படும்போதே அவன் கதிர்கள் மிகவும் சுறுசுறுப் யாகக் காணப்பட்டன. அவன் தோற்றம் ஸ்ரீராமபிரானுக் கும் பிராட்டியாருக்கும் புதிய இன்பத்தை ஊட்டுவது போன்றிருந்தது. மறு நாள் முனிவர் ஸ்ரீராமபிரானாரையும் இலக்குமண னையும் ஜனகர் வேள்விச் சாலைக்கு அழைத்துச் சென்றனர். மூவரும் ஜனகரால் மிக்க சிறப்புடன் வரவேற்கப்பட்டனர். அரசிளங்குமார்கள் தேக வன்மையும் முக ஒளியும் ஜனகர் மனத்தைக் கவர்ந்தன. அவர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்னும் அவா அவர் மன த்தில் எழுந் தது. ஆதலின், அவர் முனிவரை வணங்கி, "இவர்கள் யாவர்?" என வினவினார். முனிவர் அம்மக்களின் குலப் பெருமை, காகுத்தர் முத லிய தசரத மைந்தர் நால்வரின் சிறப்பு, தசரதரின் வன்மை, தாம் அம்மக்களைக் கொணர்ந்ததன் காரணம், ஸ்ரீராமபிரான் தாடகை முதலிய கொடிய அரக்கர்களைக் கொன்று வேள்வி முடித்த மகிமை, அகலிகைக்குப் பழைய உருவமீந்த தெய் வத் தன்மை, தாம் அவர்க்குக் கொடுத்த அஸ்திரங்கள்,ஸ்ரீ ராமர் வன்மைக்கடங்கி ஏவல் புரியும் மேன்மை முதலிய பலவற்றையும் ஜனகருக்கு எடுத்தோதினார். ! இவைகளைச் செவியேற்ற ஜனகருக்கு இன்பத்திற்கு மாறாகத் துன்பமுண்டாயிற்று. ஏனெனில், "அந்தோ! இப்போதே நம் மகள் சீதையை இக்காளைக்கு வாழ்க்கைத் துணையாக்க முடியாதவாறு ஒரு வில்லன்றோ இடை நிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/28&oldid=1567433" இலிருந்து மீள்விக்கப்பட்டது