பக்கம்:வைதேகியார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காகுத்தர் வில்லை முறித்தல் 25 கிறது! இவளுக்கு வர சுல்கமாக வைத்த ஈதின்றேல், நம் மனம் எத்துணைக் குதூகலத்துடன் இச்சீரியனை இப்போதே ஏற்றுக்கொண்டிருக்கும்! இப்புண்ணியத்தை மருகனாக நாம் பெற்றிலமே!' எனப் பல சிந்தனைகள் அவர் மனத் தில் தவழ்ந்தன. 66 பின்பு ஜனகர் விஸ்வாமித்திரரிடம் சிவ தனுசின் பெரு மையைக் கூறி, இவ்விளஞ்சிறான் விரைவில் அவ்வில்லை வளைத்து நாணேற்றில், என்னை இடர்க் கடலிலிருந்து கரை யேற்றி, என் புதல்வியையும் தவமியற்றியவளாக்குவன், என விளம்பினர். 6 இதையறிந்த முனிவர் அவ்வில்லைக்காண விழைந்தனர். ஆதலால், ஜனகர் அவ்வில்லைக் கொணரும்படி தம் ஏவலாள ருக்குக் கட்டளையிட்டனர். யானையைப் போன்ற உடலுரம் பெற்ற பல வீரர்கள், அவ்வில்லின் நடுவிடங்களில் தூண் களை வைத்து, தண்டுகளிலே தங்கள் தோள்களைக் கொடுத்து, சுமந்து வந்து அரசன் முன்னிலையில் வைத்தார்கள். அவ் வில்லைக் கண்ட சிலருக்கு, 'இதைக் கன்னியா சுலகமாக வைத்த அரசன் மிக்க கன்மனத்தன்,' எனத் தோன்றிற்று. சிலர், அழகிலும், குணத்திலும், மனத் தூய்மையிலும் சிறந்த சீதைக்கு இத்தகைய அரிய காரியத்தைச் செய்ப வனே மணவாளனாதல் தகுதி!' எனக் கூறினர். நாணேற்றும் வன்மை, இவனுக்குண்டோ!' எனச் சிலர் தயங்கினர். 'அங்ஙனமின்றேல்,தெய்வத் தன்மையும், காண்போர் கண் கவர் அழகும், வீரமுமுடைய இப்புண்ணி யனைக் கணவனாகப் பெறும் பாக்கியத்தை நம் அருமைச் சீதை இழப்பளே !' எனச் சிலர் துன்புற்றனர். அங்குக் குழுமியிருந்த மன்னர்கள் அவ்வில்லைக் கண்டு மிக அஞ்சி நடுநடுங்கினார்கள். இதை THE KUPPUSWAMY SAST RESEARCH INSTITUTE, MYLAPORE

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/29&oldid=1567434" இலிருந்து மீள்விக்கப்பட்டது