பக்கம்:வைதேகியார்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வைதேகியார் சதானந்தர், வில்லைக் குறித்தும், வைதேகியாரின் பிறப் பைக்குறித்தும் விசுவாமித்திரருக்குத் தெரிவித்தனர். முனி வர், அவ்வில்லை நாணேற்றுமாறு காகுத்தரைத் தூண்டினர்.- அக்குறிப்பை உணர்ந்த இராமர் மலை போன்ற அவ் வில்லை,தம் கலங்கா மனத்தைக் கலக்கி அதில் உறையும் பிராட்டியாருக்குச் சூட்டுதற் பொருட்டு எடுத்த பூமாலை யென ஆர்வத்தொடு கையில் எடுத்தனர். அதை மிக எளி தாகத் தூக்கிய அவர் வன்மை அங்கிருந்தாரனைவரையும் வியப்புறச் செய்தது. மன்னரும் பிறரும் கண்ணிமை கொட்டிலர். பின் நடைபெறப் போவதில் அவர்கள் கருத்து ஊன்றி இருந்தது. தியானத்திலீடுபட்ட ஞானிகளைப் போன்று அவர்கள் பார்வை அத்திருமகனையே குறிக்கொண் டிருந்தது. ஆயினும், அவணுள்ளார், இரவி குல திலகர் அவ் வில்லைத் தூக்கி நிறுத்தியதையும், அது முறிந்த ஓசையை யும் அறிந்தனரேயன்றி, அவர் அதை வளைத்ததையும், நாணேற்றியதையும் சிறிதும் உணர்ந்திலர். வீரருடைய காரி யம் அவ்வளவு விரைவில் முற்றுப் பெற்றது. அவ்வோசை மூன்று உலகங்களிலும் ஊடுருவிச் சென்று, அவணுள்ளார் யாரையும் அஞ்சச் செய்தது. ஜனகர் புண்ணியம் பலித்த தெனத் தேவர்கள் பூமழை பெய்தார்கள். முனிவர்களின் ஆசிகள் அங்கு நிரம்பின. நகரத்தார் இன்பக் கடலில் ஆழ்ந் தனர். மாதர்களின் ஆநந்தக் கூத்து மலிந்தது. பலர் வறிய வர்களுக்குப் பொன்னை வாரிவாரியிறைத்தனர். பல வாத்தியங் கள் முழங்கின. வயதில் மூத்த மாதர்கள் மங்கல வாழ்த் துப் பாடினார்கள். தேவ மகளிரும், மானிட மகளிரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு குலாவினர். மிதிலை, இந்திர லோகமோ!' என ஐயுறுமாறு சிறப்புற்று விளங் " கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/30&oldid=1567435" இலிருந்து மீள்விக்கப்பட்டது