பக்கம்:வைதேகியார்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ருமணம் வைகளைக் கண்ணுற்ற தோழி ஒருத்தி ஒடோடியுஞ் சீதையாரிடம் வந்து, அவரை வணங்கி, "கற்புக்கரசியே, வாழ்க!பொற்பிற்குப் புகலிடமே,வாழ்க! புனிதக் கொடியே, வாழ்க! புண்ணிய சொரூபியே, வாழ்க! நீ இழைத்த புண்ணி யம் இன்றே பலித்தது! பிறந்ததன் பயனை நீ இப்போதே பெற் றாய்! உன் உடலும் உயிரும் நலனுற்றன! உன் வாழ்வு சீர்மை பெற்றது! நீயே பெண்களுக்கு நாயகமாவாய்!" எனப் பல படப் புகழ்ந்து வாழ்த்தினள். காகுத்தரைக் கண்டது முதல் தம் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டிருந்த பிராட்டியாருக்குத் தோழியின் வார்த்தைகள் மிக்க வியப்பைத்தந்து, தியக்கத்தை யுண்டாக்கி னவேயன்றி, அவைகளின் பொருள் ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. எதிர் பாராத அவ்வார்த்தைகள் அவரைப் பேச ஒட்டாமல் நாவை அடக்கிவிட்டன. அவர் ஒன்றுந் தோன்றாது விழித்தனர்; தோழியை என்ன கேட்க வேண்டு மென்பதையும் மறந்தனர். இத்தியக்கத்தையும், பிரம்மிப் பையும் நன்குணர்ந்த தோழி, 'இவள் நம்மைக் கேட்பதற்கு முன்னரே நாம் விஷயத்தைக் கூறிவிட வேண்டும், எனக் கருதி, "அன்னையே, தாங்கிய வில்லுடனும், கம்பீர நடையுட னும், சிங்கநோக்குடனும், நீல மலையேயெனத் தம் தம்பியா ருடன் ஒரு முனிவர் பின் வந்த இராமரென்னும் பெயரிய ஒரு வர் வில்லை முறித்தனர். ஆண் சிங்கம் என்னில் அவருக்கே ஏற்கும்! அவர் நம் ஜனகர் செய்த தவமே உருவென வந்தவர் போலத் தோன்றுகின்றனர்!' எனச் சிறப்பித்துக் கூறினாள். ' வைதேகியார், தோழி செப்பிய செம்மொழிகளின் மாண்பினைச் சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தனர். "இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/31&oldid=1567436" இலிருந்து மீள்விக்கப்பட்டது