பக்கம்:வைதேகியார்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.28 வைதேகியார இயம்பும் குறிப்புக்களை ஊன்றி நோக்கின், என் மனத்தைக் கவர்ந்த மணவாளரே வில்லிறுத்திருக்கக் கூடுமென்பது தோன்றுகின்றது. எனினும், இதை எங்ஙனம் தீர்மானிப்பது! ஏன் வில்லை முறித்தவர் மற்றொருவராக இருத்தல் கூடாது! அங்ஙனமாயின், என் செய்வேன்! பெண்டிர் தம் நெஞ்சில் நினைத்த ஒருவரை விட்டு வேறொருவரைக் கருதல் தகுதி யாமா! அத்தகையோர் பெண்களிற் சிறந்தவராவரோ! சீலமன்றோ பெண்ணிற்குப் பெருந்தகைமை அளிப்பது! தனுவை இறுத்தவர் எவரேனும், அவரை மணக்குமாறு தந்தையார் மொழிவரே! இன்றேல், சத்தியத்திலிருந்து தவறினவர் எனத் தந்தையாரை உலகம் பழிக்குமே! அறி விற் சிறந்த பெரியோர் அவரை வெறுப்பரே! என் கொண்ட கருத்தைத் தந்தையார் எவ்வாறுணர்வர்! அந்தோ! பிறந்ததிலிருந்து கவலை இன்னதென அறியா எனக்குப் பிற ரிடம் சொல்வதற்கும் யானே நீக்கிக்கொள்வதற்கும் இய லாத பேரிடர் இப்போது வந்துற்றதே! இதுவும் என் ஊழ் வினையே போலும்! தந்தையார் வார்த்தையை மேற்கொள்ளின் கற்பு நிலை தவறும்; யான் கருதிய நெடுந்தகையை மணப்பின், தந்தையாருக்கும் குலத்திற்கும் நீங்காப் பழியுண்டாகும். என் செய்வேன்! இருதலைக்கொள்ளி எறும்பென ஆயிற்றே என் வாழ்க்கை !' எனப் பெரிதும் துயருழந்தனர். மனங பின்பு சிறிது தெளிந்து, 'யான் எத்துணை அறியா மையை உடையவள்! ஏன் யான் காலையில் பார்த்த சீரியோரே அச்சாபத்தைத் துணித்திருத்தல் கூடாது! துணித்தவர், தம்பியாரோடு முனிவர் பின் வந்த ஒரு வீர ரென்றுதானே பாங்கி பகர்ந்தனள்! அவ்வீரரையன்றோ யான் கண்ணுற்றேன்! எதையும் தெளிய உணராமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/32&oldid=1567437" இலிருந்து மீள்விக்கப்பட்டது