பக்கம்:வைதேகியார்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம் 29. கவலைக்கிடங் கொடுத்தேனே! ஈதன்றே அறியாமை எனச் சான்றோர் சாற்றுவது! பேதைமையை யான் பெருங் கலமாகப் பெற்றேனே ! பல மன்னரையும் அஞ்சி நடுங்கச் செய்யும் அவ்வில் அச்சுத்த வீரராலன்றி வேறு யாரால் இறுக்கப்பட்டிருக்கும்! அவரையன்றி வேறொருவரால் அவ்வில் முறிந்ததென நினைத்தல் பேதைமையே," எனப் பலவாறு எண்ணி, ஆழ்ந்த சிந்தனையிலமர்ந்தனர். ஒருவராலும் வளைக்க முடியாத வில் இராமரால் இற்று விழுந்ததைக் கண்ட ஜனகர், இறும்பூதெய்தினார். 'இம் மணத்தை முடிப்பதற்குள் யாதாவது இடையூறு உண் டாகுமோ!' என்னும் ஐயமும் அவருக்குண்டு. பொருள் சிறந்ததாயின், அதனிடத்தில் அச்சம் உண்டாவது மக்க ளுக்கு இயல்புதானே? ஆதலால், ஜனகர் முனிவரை நோக்கி, 'யாவும் உணர்ந்த தவ சிரேஷ்டரே, சக்கரவர்த்தி யார் வரும்வரை இம்மணத்தை நிறுத்திவைக்க வேண்டுமா? அன்றி, இப்போதே நடத்திவிடலாமா?' எனக் கேட்டனர். முனிவர் தசரதர் வரவு இன்றியமையாததென விடையளித் தனர். ஆகவே, ஜனகர் தசரதருக்கு மண ஓலையுடன் தூதுவரை விரைவிற் போக்கினர். அம்மங்களச் செய்தியை உணர்ந்து மனம் பூரித்த தசரதர், தம் சுற்றத்தாரும் படைகளும் பின்தொடா, மிக்க கம்பீரத்துடன் மிதிலை வந்தடைந்தனர். ஜனகர் தம் சேனை களுடன் தசரதரை எதிர்கொண்டழைத்து, நலம் வினவி, அவருக்கென அமைக்கப்பட்ட விடுதியில் கொண்டுபோய்ச் சேர்த்தனர். பல தேயத்து மன்னரும் மிதிலை வந்து குழுமினர். அவரவர்களுக்குத் தக்க இட அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/33&oldid=1567438" இலிருந்து மீள்விக்கப்பட்டது