பக்கம்:வைதேகியார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-30 வைதேகியார் மறு நாள் நடை டபெறப் போகும் மணத்தைக் குறித்து நாடு முழுதும் முரசறைவிக்கப்பட்டது. அவ்வமுதத் தீஞ் சொல்லைச் செவியேற்ற நகரத்தார் கொண்ட ஆநந்தம் அள விடற்பாலதன்று. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியே மணச்சிறப்புக் கொண்டாடுவதுபோலத் தோன்றிற்று. ஏழை களுக்கு அன்னமளிக்கப்பட்டது. சாலைகள் யாவும் அறச் சாலைகளாக விளங்கின. அந்நகரத்தார் அதிதிகளை இன் முகத்துடனும், இன்சொற்களுடனும் வரவேற்றனர்; அந்தணர்களைத் தானங்களினால் மகிழ்வித்தனர். ஆண் பெண் ஆகிய இருபாலார் முகங்களிலும் இன்பந் ததும்பி யது. பச்சைப் பசுங்குழவிகள் தங்கள் தாய்மார்களின் முகத்தைக் கண்டு வாய் விட்டு நகைத்தன. ஒவ்வோர் இல் லத்தின் தலைவனும் தலைவியும் ஒக்கவிருந்து தம் இல்லத்தை மங்கலப் பொருள்களாலும், சித்திரங்களாலும் அணி பெறச் செய்தனர். பொது இடங்கள் யாவும் மரங்களாலும், மலர்களாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன. சந் தனம், அகில் முதலியவைகளின் தூமம் எங்கும் கமழ்ந்தது. இரத்தின தீபங்களும், பாலிகைக் கிண்ணங்களும் திண்ணை களில் பத்தி பத்தியாக வைக்கப்பட்டன. நக்ஷத்திர மண் டலமே கீழிறங்கியதென முத்துப் பந்தரிடப்பட்டது. இன்னணம் அலங்காரத்தினாலும், ஆநந்தத்தினாலும் நிரப் பப்பட்ட அந்நகரம் இந்திர லோகத்தையும் எழிலில் விஞ்சி நின்றது எனக் கூறுதல் மிகையாகாது. தசரதர் முதலிய மன்னரும் வசிஷ்டர் முதலிய முனி வரும் மண மண்டபத்தைச் சார்ந்து, அவரவர்க்கு ஏற் படுத்தியிருந்த இருக்கையிலமர்ந்தனர். ஏ ஜனகர் ஏவலினால் ஜானகியார் மிக்க அலங்காரத்துடன் மண மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அச்சம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/34&oldid=1567439" இலிருந்து மீள்விக்கப்பட்டது