பக்கம்:வைதேகியார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம் 31 மடம், நாணம்,பயிர்ப்பு என்னும் நாற்குணங்களே அவருக்கு நாற்படைகளெனும் உரிமை பூண்டன ; ஐம்புலன்களே அள ருக்கு அறிவுடை அமைச்சர்களாக அமைந்தன ; பொன்னும் மணியுங் கலந்து செய்யப்பட்ட காற்சிலம்பே முரச வாத்திய மென முழங்கிற்று. அவர் விழிகளே வேலும் வாளுமாக விளங்கின. அவர் முகமே சந்திர வட்டக் குடையெனப் பொலிந்தது. இத்துணைச் சிறப்புக்களுடன் அறிவாகிற செங்கோலைக்கொண்டு தம் மனத்தைச் செந்நெறியில் செலுத் தும் நம் வைதேகியாரை, மங்கலில்லாத தீபத்தையொத்த உடலொளி வாய்ந்த தோழியர் பலர் சூழ்ந்து வந்தனர். அவர்கள் நாப்பண், அன்னத்தையொத்த நடையையும், பெண் மானையொத்த நோக்கையும், திருமகளை நிகர்த்த அழகையும் பெற்ற ஜானகியார் மிக்க அமைதியுடன் நடந்து வந்தனர். இக்காட்சி உடுக்களிடை மிளிரும் சந்திரனெனக் காணப்பட்டது. அவர் ஆபரணங்களிலிருந்து காலும் ஒளி, வட்டமாக அவரைச் சுற்றிலும் பரவிற்று. அஃது அவரை ஈன்ற பூமி தேவி தன் மகளின் பாதங்கள் தரையில் உறுத்தி நோவுறா வண்ணம் தளிர்களையும் மலர்களையும் பரப்பி வைத் துள்ளாளெனத் தோன்றியது. இரு மருங்கும் சாமரங்கள் வீசப்பட்டன. அவை, அன்னையார் நடையைக் கற்க வந்த அன்னங்கள் தோற்றுக் கீழே விழுவதும் எழுவதும்போல இருந்தன. கண்டவர்கள் கண்களை முகிழ்க்கச் செய்யும் ஒளி மிக்க விதானம் ஒன்று பிராட்டியாரின் சிரசின்மேல் பிடிக்கப்பட்டது. அது, தன் குலப் பேரரான இராமருக்கு இல்லக்கிழத்தியாராகப் போகும் ஜானகியாரைக் காணக் கீழி றங்கிய சூரியனென மிளிர்ந்தது. இங்ஙனம் பிராட்டியார் ஆடைகளினாலும், ஆபரணங் களினாலும், பரிவாரங்களினாலும் திகழ்ந்து விளங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/35&oldid=1567441" இலிருந்து மீள்விக்கப்பட்டது