பக்கம்:வைதேகியார்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வைதேகியார் அஃது அழகுக்கு அழகு செய்வதுபோல இருந்தது.நம் அன்னையாருக்குச் சாமானியரும் போற்றத்தக்க உடலழகும், சான்றோர் ஏத்தத் தக்க குணவழகும், காண்போர் களிக்கத் தக்க அணியழகும் பொருந்தியிருந்தன. அவரைக் கண்ட இருபாலாரும் சித்திரத்தில் வரைந்த ஓவியமெனச் செயலற் றிருந்தனர். மாட "இப்போது இவ்வவைக்கு வரப்போகின்றவள், கன்னி த்திலிருந்து என் கருத்தைக் கவர்ந்தவளோ, அல் லளோ!' என்ற ஐயத்தினால் வருந்தி வாடியிருந்த காகுத்த ரின் மனத் தாமரை, வைதேகியாராகிய ஆதித்தனால் அலர்ந் தது. "என் சிந்தையில் தங்கியிருந்த இவள் எங்ஙனம் வெளி வந்தனள்! இவள் ஒருவர் அகத்திலும் புறத்திலும் வீற்றிருக்கும் மந்திர வித்தையில் தேர்ந்தவள் போலும்! இயற்கையழகு வாய்ந்த இவளுக்குச் செயற்கையழகு எதற்காக? இவைகளைச் சுமந்து ஏன் இவள் வாடவேண்டும்? இவள் இடை ஒல்கப் பல அணிகளை இவளுக்குப் பூட்டிய தோழிகள் மிகவும் கருணையற்றவர்கள்; இவளழகு சால் புடைத்து ; அருளழகு ஒழுகும் இவள் நோக்கு என்னைப் பெரிதும் வருத்துகின்றதே! இவளன்றோ பெண்களுக்குள் நாயகமாவாள்! இவளை வாழ்க்கைத் துணையாகப் பெற்ற என் பாக்கியமன்றோ பெரும்பாக்கியம்! இஃது என் முன் னோர் செய்த தவமேயாகும், எனத் தமக்குள்ளே சிந்தித் துக்கொண்டு, கடலமுதத்தைக் கண்ட இந்திரனெனக் களித்திருந்தனர். "இவளே திருமாலுக்கேற்ற திருமகள் என வசிஷ்ட ரும் பிராட்டியாரை வாழ்த்தினர். தேவர்களையும் வென்று அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெற்ற தசரதர் மனம் அன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/36&oldid=1567442" இலிருந்து மீள்விக்கப்பட்டது