பக்கம்:வைதேகியார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

THE KUPPUSWAMY SASTRI RESEARCH INSTITUTE. MYLAPORE. 2. ஜனகரின் பெருமை MADRAS - ன்னோரன்ன நவிலவொண்ணாப் பல பெருமிதங்கள் இயற்கையாகவே வாய்க்கப்பெற்ற பாரதநாட்டின்கண் மிதிலை என்னும் ஒரு நகரம் உண்டு. அது விதேக தேசத்தின் முக்கிய பட்டணம்; அது நீர்வளம் நிலவளமாகிய இம்மைச் செல்வத்தையும், ஆத்தும தத்துவ விசாரனையாகிய மறுமைச் செல்வத்தையும் பெற்று விளங்கிற்று. மிதிலையை ஜனகர் என்னும் ஒரு தத்துவ ஞானியார் ஆண்டுவந்தார். அவர் செங்கோன்மையின் சிறப்பைப் புகழா தார் ஒருவருமிலர். குடிகள் நன்னெறியில் நடப்பதற்கு அவர் நல்லொழுக்கமே வழிகாட்டியா யிருந்தது. சாம பேத தான தண்டம் என்னும் நான்கு உபாயங்களையும் அவர் காலத்திற்கேற்பக் கையாண்டு வந்தனர். குடிகளைத் தம் மக்கள் போலக் கருதுங் கருணை அவரிடம் பொருந்தி இருந்தது. குடிகளுக்கு அவரிடம் பயமும் பக்தியுமிருந்தன. அவர்களுக்கு நேரும் இன்ப துன்பங்களைத் தமவாகவே ஜனகர் நினைத்தனர். குடிகள் ஜனகர் மாட்டுக் காட்டிய அன் பிற்கு அளவின்று. " இவ்வாறு ஜனகர் தம் குடிகளை அன்புடன் ஆள்வதிலும், சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு ' " திருவள்ளுவர் என்பதற்கேற்பத் தம் ஐம்புலன்களையும் வரம்பு கடவாமல் தம் வசப்படுத்துவதிலும் வல்லுநராயிருந்தனர். நிலையற்றவற்றை நிலையென உணரும் புல்லறிவு ஜனக ரிடம் அணுகிலது. அவரை முற்றும் துறந்த முழு ஞானியார் என்றியம்பல் மிகையாகாது. ஆனால், அவர் அரசகாரியங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/7&oldid=1563322" இலிருந்து மீள்விக்கப்பட்டது