பக்கம்:வைதேகியார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதேகியார் தம் கடமை இன்னதென்பதையுணராமல் அசட்டை செய் தனரோ, அன்றி மனைவி மக்களை விட்டுக் காட்டுக்கேகினரோ என்னில், அங்ஙனஞ் செய்தாரல்லர்; அரச செல்வமும், குடிகளும், சுற்றத்தாருமே அழியா இன்பத்தைத் தரும் வீட்டின்பேறு எனக் கருதும் ஒருவர் எங்ஙனம் அக்காரியங் களை மன ஊன்றுதலுடனும் ஊக்கத்துடனும் இயற்றி வரு வரோ, அதினும் பதின்மடங்கு அவ்விஷயங்களில் கருத்துச் செலுத்திவந்தனர். தவிர, ஆன்ம தத்துவ விசாரணையிலும் அவர் தம் பெருங்காலத்தைக் கழித்து வந்தது போற்றத் தக்கதாகும். 'மன்னர்கள் அரச விஷயங்களில் தவிர வேறொன் றிலும் ஒரு விநாடியேனும் செலவிட முடியாது,' எனக்கூறும் பலருக்கும் அவர் செய்கை அறிவு புகட்டியதென்னலாம். அவர் மனம் மாசற்ற பளிங்கெனக் களங்கமற்று அமைதிக் குத் தானே இடமெனத் திகழ்ந்தது. அவர் அரசியல் ஆன்மார்த்தம் ஆகிய இரண்டில் எவ்வமயம் எதிற்செல்லு கின்றனரோ, அவ்வமயம் மற்றொன்றை அறவே மறந்து விடுவர். அலையற்ற நீர்நிலைபோன்று அவர் சிந்தை சலனமற் றிருந்தது. இங்ஙனம் அவர் இல்லறம் துறவறம் என்னும் இரண் டிலுங் கை கண்ட கண்ணியராக இருந்தனர். அது போலி ஞானிகள் சிலருக்கு அழுக்காற்றை விளைவித்தது. ஜனகரை நீரிலும் நிலத்திலும் வதியும் தவளைக்கு ஒருவாறு ஒப்பிட லாம். அதனாலேயே அவருக்கு ராஜ ரிஷி என்னும் ஒரு பெயரும் வழங்கலாயிற்று. அறிவிற் சிறந்த பெரியோர்க ளிடம் தத்துவத்தைக் கேட்குங்கால், அவர் மனம் வேறொன் றையும் ஏற்க இடம் பெறுவதில்லை. ஆறறிவுடைய மக்க ளுக்கு இல்லறம் துறவறமாகிய இரண்டிலுமுள்ள பொறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/8&oldid=1563323" இலிருந்து மீள்விக்கப்பட்டது