பக்கம்:வைதேகியார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதேகியாரின் முற்பிறப்பு புக்கள் இன்ன இன்ன என்பதைக் குறிப்பதற்கு அவர் ஓர் இலக்கியமாக விளங்கினர். 'ஆறறிவுயிரே மக்கட் சுட்டே, என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருள் அவர் மாட்டு நன்கு பொலிந்தது. இத்தகைய பெருநதன்மை வாய்ந்த ஜனகர், தம் குடிகள் மாட்டுக் கெழுமிய அன்புடையராய், காட்சிக்கெளியராய், கடுஞ்சொல்லொழித்தாராய் அரசு நடாத்தி வந்தனர். ஈதன் றியும், அவர் நாடொறும் தம்மாசிரியரிடஞ் சென்று ஆன்மா பயன் துய்ப்பதற்கேற்ற தத்துவங்களைச் செவியேற்று வரு தல் வழக்கம். இம்முறையில் அவர் வாழ்க்கை மிக்க நேர்மை யுடன் நடைபெற்றது.ஆனால்,பன்னாட்கள் வரையும் அவர் மக்கட் பேற்றையடையும் புண்ணியம் வாய்க்கப்பெற்றிலர். எனினும், தத்துவ ஞானியராகிய அவரை இத்துயர் சிறிதும் வருத்திலது. இது நிற்க. 3. வைதேகியாரின் முற்பிறப்பு ய ஒருகால் இலங்கைக்கதிபதியாகிய இராவணன் உலகத் தைச் சுற்றிவந்து இமய மலையை அடைதல் நேர்ந்தது. அவ் வமயம் தேவமகளிரைப் போன்ற வனப்பு வாய்ந்த ஒரு பெண்மணி அவண் கடுந்தவமியற்றிக்கொண்டு இருத்தலை அவன் கண்ணுற்றான். ஒப்பற்ற அழகு வாய்ந்த அவ்விள மங்கையாரின் தவச் செய்கை அவனுக்குப் பெரிதும் வியப் பைத் தந்தது. சிறிது நேரம் அவன் ஒன்றுந் தோன்றாது திகைத்து நின்றான்; பின்பு அவ்விளமங்கையாரின் அருகிற் சென்று, அவர் யாரென்றும், அவர் தவஞ் செய்வதற்குக் காரணம் யாதென்றும் இனிய சொற்களால் வினவினன். அவ்வினிய சொற்களைச் செவியேற்ற அம்மங்கையார் இராவணனுக்கு விதிப்படி அதிதி பூஜை செய்து, பின் வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/9&oldid=1563324" இலிருந்து மீள்விக்கப்பட்டது