பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கணவரைத் திருத்திய காரிகை செவ்வரம்' என்பது அம் மொழி. இராமன் இங்ங் னம் தனக்கு வாக்களித்ததாகச் சீதை நினைவுபடுத் திக் கூறியனுப்பினள். இங்ங்னம் கம்பர் கூறுதற்குத் துணையாக இருந்தது ஈண்டுச் சேக்கிழார் பெருமானர் செப்பிய மற்றை மாதரார் தம்மை என்றன் மனத்தி னும் திண்டேன்" என்னும் சீரிய தொடரே அன்றி வேறன்று. கற்புறு மனைவியாரும் கணவர்ைக்கு ஆன எல் லாம் மெய்யுருத வகை பொருந்துவ போற்றிச் செய்து வந்தனர். இருவரும் வேறுவேறு வைகினர்; அயல் அறி யாமை வாழ்ந்தார். இதுவே இல்லறம் நடத்துவோர் நற்பண்பாகும். குடும்பக் குழப்பம் எதுவாயினும் அது குவலயம் அறியாவாறு கடந்துகொள்வதே சால்புடையதாகும். கிருகச் சித்திரம், வெளியிடுதல் கூடாதது என் பது நீதி நூல் கருத்தும் ஆகும். ஆகவே, அயலறி யாமை வாழ்ந்தார் என்பதும் அருமையினும் அருமை யாகும். அம்மையார் மெய்யுரு வாழ்வு நடத்திலுைம் கணவனரைப் போற்றும் கருத்தில் மட்டும் தவறில ராய் கடந்து, தற்கத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாப் பெண் னிற்கு தாம் ஓர் எடுத்துக்காட்டாய் இலங்கிவந்தனர். கணவன் மனைவிக்குப் பிணக்கு வருதல் உண்டுஇதனைத் தமிழ் இலக்கணம் ஊடல் என்று உரைக் கும். ஊடல் கூடற்கு இன்பம் என்றுகூடக் கூறுவர் கூரிய மதியினர். ஆல்ை, .திருநீலகண்டனர்க்கும் அன்னர் திருங் திழையார்க்கும் உற்ற பிணக்கு நாள் கடந்து, வாரம் பல போகி, திங்களும் எண்ணில தீர்ந்து, ஆண்டுகளும்