பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி செந்தமிழ் மொழியில் கொடைச் சிறப்புப் பெரு வாரியாகப் பேசப்பட்டிருக்கிறது. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லே உயிர்க்கு” என் னும் குறிக்கோளே கினைத்து நம் தமிழ் மக்கள் ஈகைப் பண்பை மேற்கொண்டிருந்தனர். இந்தப் பண்பாட் டில் தலைசிறந்து விளங்கிய காரணத்தால் இன்னது ஈதல், இன்னதை ஈதல் ஒண்ணுது என்றுங்கூட எண் னராய்த் தம்மை அடுத்து இரப்பவர்க்கு எதையும் ஈந்து வந்தனர். இவ்வாறு ஈங்து ஈந்து தமிழ் மக்கள் மடம்பட்ட காரணத்தால் இலக்கணத் துறை யிலும் இதற்கென ஓர் இலக்கணத்தையும் வகுத்து விட்டனர். அதுவே கொடைமடம் என்பது. இத் தொடரை விளக்கவந்த உரையாசிரியர்கள், இன் னதைத்தான் கொடுக்கலாம். இன்னதினைக் கொடுத் தல் கூடாது என்று கருதாமல் இயல்வது கரவாது மடமைப்படுதல்” என்று விளக்கிக் கூறினர். இக் கொடைமடக் குணம் தன்பாய் இல்லையானல் குறு நில மன்னனை பாரி முல்லைக் கொடிக்குத் தான் ஊர்ந்துவந்த தேரை நிறுத்தி அது படர்தற்கு உதவி இருப்பான ? இரான் அன்ருே ? இவனைப் போலவே பேகன் என்பானும் களி ரால் வாடிய மஞ்ஞைதனக்குத் தான் போர்த்தி யிருந்த பட்டுப் படாத்தினை சந்து இருப்பானே ? இரான் அன்ருே ? இன்னேர் அன்னேர் இயல்பினை விளக்கும் பொருட்டே கொடைமடம் என்னும் புறப்