பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி பொருள் இலக்கணமும் வகுக்கவேண்டியதாயிற்று. இம் மடம் கொண்ட மன்னரே அன்றி, மன்பதைதன் னுளும் ஒருவர் இருந்தனர் என்பதையும் நாம் அறி தல்வேண்டும். அன்னர் யார் என்பதையும், அவர் கொடை மடம் பட்டது எங்ங்ணம் என்பதையும் சிறிது காண்போமாக. சங்கச் சான்ருேரால் பெரிதும் பாராட்டப் பட்டுப் பாடப்பட்ட தமிழ் காட்டுப் பழம் பதிகளில் புகார் என்னும் பெயரிய பொருவில்காடு ஒன்று உண்டு. இதுவே காவிரிப்பூம்பட்டினம் எனப்படும். காட்டின் கலத்தைக் கூறவந்த நாவலர், காடென்ப காடா வளத்தன காடல்ல காட வளங்தரு நாடு. என்று கூறிப் போந்தார். இதல்ை நாடு என்பது தன்னகத்தே மக்கட்கு வேண்டுவன பெற்று ஒன்று தேவை எனப் பிற நாட்டிற்குப் புகாதிருப்பதே என் பது புலகிைறது. இந்த வளனும் வனப்பும் காவிரிப் பூம்பட்டினம் பெற்ற காரணத்தால் புகார் (அதா வது ஈண்டுள மக்கள் தம் கலம் கருதிப் பிறநாடு புகார்) என்னும் பெயரைப் பெற்றதைக் காண்க. பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பின் புகார். என்பது சிலப்பதிகார அடிகள். மற்றும் இதன் பெருமை பல்லாற்ருனும் பரந்து நிற்றலின், இதன் பழம்பெருமை உணர அவாவுறுவோர், சிலப்பதி காரம், பட்டினப் பாலை, மணிமேகலை போன்ற நூல் களைப் பயின்று, பலனுறுவாராக. புகார் நகரைப் புனிதமாக்குவது தாவில் புக ழுடை காவிரியாகும். இதன் கன்னிர் பாய்தலால்