பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர். பின் சென்ற மூதறிவாட்டி 105 பதும் அன்புக்குகந்த ஆருயிர் அணங்கர்ை என்பதும் புலனுகின்றன அல்லவோ? இப்பொருளினைக் கற்பு, காதல் என்னும் இரு சொற்களும் தந்து நிற்கின்றன. அவ்வாறு அணுகிய அவர் அம்மாதராரை விளிக்கையில் 'விதி மண்க் குல மடந்தை,” என்று விளித்துக் கூறுவாராயினர். இத ல்ை இயற்பகையாருக்கு வாழ்க்கைப்பட்ட வாழ் வரசியார் காதலால் வந்தவர் அல்லர் என்பதும், கடி மணம் புரிந்துகொண்ட கவினுடை வனிதையர் என் பதும் அன்ருே அறியவல்லவராகின்ருேம். இவ்வாறு எல்லாப்படியாலும் பிரிந்துவாழ இயலாத இம் மங்கையர் திலகத்தையும் கொடுக்க அவ்வணிக குல வள்ளல் துணிந்ததால், அவரை இயற்பகையார் என் பதில் யாது ஐயம் உளது ? வன்தொண்டப் பெருங் தகையாம் வனப்பகையப்பனர், ' இல்லையே என்னத இயற்பகை' என்னும் பொன்மொழியும் போற்று தற்குரிய தன்ருே ? இயற்பகையார் தம் இல்லக்கிழத்தியர்பால், 'கற் பிற் கணிகலமே ! உன்னே யான் இன்று முனிவர் உடைமைப் பொருளாகக் கொடுக்க இசைந்தேன் ; கொடுத்தும் விட்டேன்." என்றதும் அவ்வம்மையார் உடனே துணுக்குற்ருர். ஈண்டுத் துணுக்குறல் வேண்டியது இன்றியமையாதது. இதுவே உளநூல் பண்பு. அவ்வம்மையார் தாம் தம் கணவரிைடம் ஒழுகும் ஒழுக்கத்தில் தவறு கண்டு தம்மை ஒருவு தற்கு வழிகண்டு இவ்வாறு கணவனர் செய்தார் போலும் என்னும் எண்ணம் இவ்வம்மையார் உள் ளத்தில் உதித்திருக்கவேண்டும். இதுவே இவரை அவ்வாறு துணுக்குறச் செய்தது. ஆனால், உளமார