பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி 107 உள்ளி உள்ள எலாம் டிவந்தியும் வள்ளியோர் என வாயாரக்கூறி வழுத்தலாம் அன்ருே முனிவர், அன் பரே யான் உம் மனத்துக்குகந்த மனைவியாரை அழைத்துச் செல்கையில், ஆற்று நெறியில் உம்,அருங் கிகளஞர் எனக்கு அல்லலே ஆற்றவும்கூடும். உறவினரே அன்றி உலகத்தவரும் என்னே ஒறுத்தே தீர ஓடிவரு வர். இன்ைேரன்ன இடையூறு எய்தாதவாறு சிறிது சேய்மைக்கண் யான் செல்லுமளவும் செழுந்துணை யாக வருதல்வேண்டும்” என்று இரந்து வேண்டினர். இய்ற்பகையார் உடனே போர்க்கோலம் பூண்டு பின்தொடர்ந்து போவார் ஆனர். முனிவர் முன் செல்லப் பின்னே மொய்குழலார் அம் முனிவரைத் தொடர்ந்து செல்வார் ஆனர். இவ்வாறு இவ்வம்மை யார் சென்றதல்ை அன்ருே இவர் முனிவர்பின் சென்ற மூதறிவாட்டி என்று கூறப்பெறும் பேறும் பெற்றவரானர். இயற்பகையார் தம் இல்லக்கிழத்தியரை எவனே ஒரு முனிவனுக்கு ஈந்துவிட்டனர் என்னும் இம்மாற் றம் அவ்வூர் எங்கும் காட்டுத் தீப்போல் கடுகப்பரங் தது, இருவர் கேளிரும் கிளைஞரும் ஒருசேர முனி வரைச் சூழ்ந்து அழிதகன் போகேல் ! அருங்குலக் கொடியை விட்டு அகல் ' என்று அதட்டி உருட்டி மிரட்டினர். முனிவர் அஞ்சினர்போல் அணங்கைைரப் பார்த் தார். அருங்குணவதியார், ' இறைவரே ! அஞ்சற்க. கம் இயற்பகையார் அவரை எல்லாம் வெல்வர்.” என்று விடை இறுத்தார். இவ் அம்மையார் முனி வரைத் தவறுடைய தவசி என்று கருதாது, இறை வரே ! இவ்வாறு வந்தார்போலும் என்று எண்