பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி னியே இறைவரே " என்று விளித்துள்ளார். இத ல்ை தீய குறிப்புடன் முனிவர் வந்திலர் என்பதும், அம்மையார் உடன்சென்றது குற்றம் அன்று என்ப தும் இயற்பகையார் ஈந்ததும் தவருகாது என்பதும் முதலான குறிப்புக்கள் தொனிப்பனவற்றைக் காண்க. சினத்தொடு வந்த சுற்றமும் நட்பும் இயற்பகை யாரை நோக்கி, ' ஏடா ! நீ என்செய்தாய் ! உன்றன் மனைவியை முனிவர்க்கிதல் முறையாமோ? அறமும் தானே? இப்பழி உன்னேடன்றி நம் மரபுக்கும் மாசாகாதோ ? ஆகவே, இதனில் நாங்கள் வெற்றி காண்பளவும் எதிர்த்து வீரசுவர்க்கமே புகுவோம்' என்றனர். இதல்ை இயற்பகையார்க்கும் அன்னர் தம் இரும்பெருஞ் சுற்றத்தார்க்கும் அதுகாரணமாகப் பெரும்போர் மூண்டது. மானம்காக்கச் சிலர் மாண்டும் போயினர். மயிர் ப்ேபின் வாழாக் கவரிமான் அன் னர், உயிர்ப்ேபர் மானம் வரின்,' என்பதற்கு இயற் பகையாரின் இனிய கிளைஞர்களே எடுத்துக்காட்டாய் விளங்கினர். இதனால் இயற்பகையார் செய்த செயல் அக்காலத்தும் ஏற்றுக்கொள்ள எவரும் விரும்பிலர் என்பதும், இப்பெருங் தொண்டிரும் இயற்கைக்குப் பகைவரே என்பதும் புலனுகின்றன"அன்ருே ! இயற்பகையாரின் மனநிலையைக் கண்ட நட்பும் கிளையும் ' இனி இவனுடன் வாதிட்டுப் பலனில்லே.' என்று வந்தவழியே மீண்டனர். முனிவரும் மாத *ராரும் செயற்கரும் செய்கை செய்த தீரராம் இயற் பகையாரும் சிறிதுதுரஞ் சென்றனர். முனிவர் , திருச்சாய்க்காடு .ெ ச ன் ற் து ம், ' அன்பனே! இனி நீர் செல்லலாம் யானும் செல்கின் றேன்” என்றனர். இயற்பகையார் உடனே விடை