பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி A69 பெற்றுத் தம் வீடு திரும்பினர். சென்றவர்.இத்துண காலம் இன்புடன் தம்முடன் வாழ்ந்த ஏந்திழை யாரைச் சிறிதும் ஏறிட்டுப் பாராதே திரும்பினர். என்னே இயற்பகையாரின் தூய உளப்பான்மை! முனிவுர்க் கீந்தபோதே அம்மாதராரைத் தம் மனைவி யார் என்பதை மறந்தார். இனி கினைப்பதும் பார்ப் பதும் தவறு எனவே தன்னகத்துக் கொண்டார். முனிவராக வந்தவ்ர் இயற்பகை முனிவரின் இல் லக் கிழத்தியாரைத் தாம் வேட்டது இல்லறம் கடத்து தற்கு அன்று. ' அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதை இம்பர் ஞாலம் உணரவே இவ். வாறு இச்செயல் புரிந்தார். ஆகவே, அத்தொண்டன. ரின் தூய்மையை விளக்க அவரை மீண்டும் மயக்கறு மறையோலிட்டு மாலயன் தேட கின்ருர், ‘இயற்பகை முனிவா ஒலம் : ஈண்டு நீ வருவாய் ஒலம் : அயர்ப்பி லாதானே ஒலம்: அன்பனே ஒலம் ஒலம் செயற்கரும் செய்கை செய்த தீரனே ஒலம் ” என்று அழைப்பார் ஆயினர். இவ்வாறு ஒலமிட்டுக் கதறிய கதறலேக்கேட்ட இயற்பகையார் மீண்டும் சுற்றத்தார் வந்து தொங் தரவு செய்தனரோ என்று துணுக்குற்றவராய், “அடியனேன் வந்தேன் வங்தேன் ” என்று ஓடோடி யும் வந்தார். வந்து முனிவரைக் கண்டிலர் மொய் குழலாரைக் கண்டார். இதற்கிடையில் முனிவர் அம்மையப்பராய் அகல்வானில் பொலியக் கண்டார். இயற்பகையாரும் அவர் தம் இன்மனையாரும் இறைவரைத் தொழுது மீண்டார். . இறைவரும் அவர்கள் என்றும் இணைபிரியா வாழ்வெய்தும் வரத் தையும் ஈந்தார்.