பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 உத்தி கூறிய உத்தமி இறைவன் திருநாமம் கூறும் திருக்கூட்டத்தினர்க் கும், மங்கள வேடம் பூண்ட மாட்சிமையுடையவர்க் கும் சோறும் கூரையும் சோராது அளித்துவந்தார். இவர்க்கு அடியார் பக்தி அதிகம். எவரையேனும் இவர் காண நேரிடின் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார். அவர்களைக் கொண்டு வந்து மனப்பு குங்து குலாவு பாதம் விளக்கியே மண்டு காதலின் ஆத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின் உண்டி காலு விதத்தில் ஆறு சுவைத்தி றத்தனில் ஒப்பிலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையின் அமுது செய்ய அளித்துள்ார். இந்த முறையில் தம் கடமையை ஆற்றிவருவார் ஆயினர் இவ்வாறு செய்து வந்ததால், பொய்யில் புல வர் பொருள் உரையாகிய வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். என்பதற்கு இணங்க, இவரது கன்செய் நிலங்கள் நல்ல பலனை அளிக்க அளகேசன் நிகராக வாழ்ந்து இல்லறத்தை இனிதாக கடத்திவந்தார். மக்கள் இயல்பு மாண்.ொருள் தமக்குள்ள காலத்தில் தானமும் தருமமும் செய்வதாகும். அது குறைவுற்றபோது தருமம் செய்யச் சிறிது தளருவர். அடுத்துக் கேட்டாலும், ' தனக்கு விஞ்சித்தானே தருமம்' என்று பழமொழி கூறிப் பரிகசிப்பர். ஆனால், வறுமையிலும் செம்மையுடையவராய்த் தாம் மேற்கொண்ட விரதம் எவ்வகையிலும் கெடாத வாறு, தம்மால் ஆன உதவியைச் செய்து இசை நிறுவு பவரே மக்கள் என்னும் பண்புக்குரியவர் ஆவார். இன்றேல் பெரியர் என்ருே சீரியர் என்ருே, செப்ப