பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 உத்தி கூறிய உத்தமி இறைவனர் முதுமைக் கோலத்தோடு மாறனர் வீடு தேடி வருவாரானர். இவர் வருகின்ற நேரமோ, இருள் அடர்ந்த கங்குல். காலமும் கார்காலம். மேகம் உள்ளி உள்ளவெலாம் உவந்தீயும் வள்ளியோரின் வழங்கிச் சிறிது சலித்து நிற்கும் நேரம். வரும் முதியரின் கோலம் தள்ளாடித் தளர்ந்துவரும் கோலம். இவரது பண்டிசரி கோவண உடை இவரது பழமையை மேலும் மிகுதிப்படுத்தியது. வேணுத் தண்டும் ஆதபம் மறைக்கும் குடையும் அணிகரத்து அழகு செய்தன. இவையனைத்தினும் பசிப்பிணி விஞ்சியவராய்ச் சோறு கருதி மாறனர் இல்லத் திற்கே சோர்ந்து வந்து சேர்ந்தார். மாறனர் இம் முதியரைக் கண்ணுற்றதும் முதல் உதவி செய்ய முனைந்துகின்ருர். அவரது ஈர மேனியை ஈர அன்புடன் தூய ஆடை ஈந்து துவட்டச் செய்தார். வீட்டினுள் ஆசனத்தில் அமர்த்தினர். வந்த முதிய வர் பசியைப் போக்க வழிதேடலாயினர். மாறனர் தம் வீட்டில் உணவு இன்மையை நன்கு அறிவர். என்ரு லும், வந்த விருந்தினரை எந்த விதத்திலும் உண்டி கொடுத்து உதவவேண்டும் என்று உளங்கொண்டார். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்" என் னும் பண்டைத் தண்டமிழ்த் தொடர் அன்று இல் லத்திற்குவந்த முதியவர் கிலேக்கு மிக ஏற்றது என்ப தையும் நன்கு அறிந்தார். ஆகவே, தம் வாழ்க்கைக் குத் துணைவியாராகிய தம் இல்லக்கிழத்தியாரோடு இதுபற்றி யாது செய்வதெனச் சிந்திப்பார் ஆயினர். பெருந் தடங்கண் பிறை நுதலார் ஆகிய அவ் வம்மையார் பொருந்து கல்வியும் அறிவும் பூத்திருந்த காரணத்தால் வருந்தி வந்தவர்க்கு விருந்தளிக்க