பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மனேயை மங்கலம் ஆக்கிய மடங்தை கும் தகவுடைமை அன்ருே இவர்பால் அமைந்த செயற்கரிய செயல். இதுவன்ருே இவரைப் பெரியர் ஆக்கியது. வன்தொண்டரைக் காளுவிடத்து, அவனை யான் முன் காணும் நாள் எங்காள் ' என்று கழறி யவர், வர வெதிர் காண்பேன் ஆகில் வருவது என்னங்கொல்?’ என்று கருவியவர், காணும் வாய்ப் புப்பெற இருந்தும் தம்மையே அன்ருே தாக்கிக் கொண்டார். பிறர் செய் குற்றத்திற்குத் தம்மையே ஒறுத்துக்கொண்டவர்களுள் சித்தலேச் சாத்தருைம் ஒரு சான்ருய் அமைவர் அன்ருே கலிக்காமர் செயல் இக்காலத்துச் சத்தியாக்கிரக செயல்போன்றது. பிறர் செய் குற்றத்தை எடுத்துக்காட்டித் திருத்துவதி னும் அதன் பொருட்டுத் தாமே வருந்தித் துயருற் முல் குற்றம் செய்தவர் தவறுணர்ந்து திருந்தவும் கூடும் என்னும் சீரிய நோக்கமே தம்மை ஒறுத்துக் கொள்ளும் தன்மையாகும். இதுவே அகிம்ஸைப் போர், உண்ணுவிரதப் போர், சாத்துவீகப் போர். இவ்வுணர்வு இற்றைக்கு ஆயிர ஆண்டுகட்கு முன் பிருந்ததை நோ க்க நாம் இறும்பூதுகொள்ள வேண்டும் அன்ருே ? கணவனர் தமக்கு அருகே இருந்து ஆவன செய்துவந்தார் கலிக்காமர் மனைவியார்; அல்லும் பக லும் அவரைவிட்டு அகலாதிருந்தார்; தோன்றற்கும் தோகைக்கும் ஒன்ருய் வரும் இன்பதுன்பங்கள் என் "னும் இலக்கணத்திற்கோர் இலக்கியமாய்க் கலிக்காமர் குலேயால் பட்டதுன்பம் எல்லாம் தமக்கு வந்தாற் போல் தாமும்,உணவு இன்றி உறக்கம் இன்றி உப சாரம் செய்துவந்தார். இங்கிலையில் தம் கொள்கையில் மாருக் கோமகளுர் வாள்கொண்டு வயிறு கிழிந்து