பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மனேயை மங்கலம் ஆக்கிய மடங்தை மங்கலம் ஆக்கிய மடந்தை என்று அழைக்காம்ல் வேறு எவ்வாறு அழைப்பது ? அறைமின் என்னே அம்மையாரது அன்பு ? அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் ' என்னும் உறுதியுடையவர் ஆதலின், இங் ங்னம் செய்தார்போலும் ! ஆருரர் அகத்துள் புக்கார் ; ஆசனத்தமர்ந்தார். 'ஏயர்கோனர் எங்கே அவர்க்கு ஏய வன் சூலே தீர்க்க வந்துற்ருேம் ' என்று எழுந்தார். அம்மை யார் அவ்விறைக்கு தாமே விடை இறுக்க ஒவ்வாராய் மனைத்தொழில் மாக்கள் மூலம் அவர் யாதோர் ஏதம் இன்றி, உள்ளே பள்ளிகொள்கின்ருர் ' என்று பகரச்செய்தார். “ அம்மையார் கூறிய கூற்று அடாத கூற்று. அவர் சால்புக்கு இஃது ஒர் இழுக்கு'. என்னலாம் அன்ருே அற்றன்று. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்,' என்னும் சட்டமும் தமிழில் உண்டு. இதல்ை பொய் புகலப் புறப்படல் கூடாது. தமிழ் அத்துணே இடங் கொடுத்துவிடாது. ' புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனில்" என்னும் தொடருக்குரிய ஆழ்ந்த பொருளை அறிந்தபின் வேண்டுமேல் புகல்க. "வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன் றும் தீமை இலாத சொலல் என்னும் குறளினேக் கருதும்போது அம்மையார் அறிவித்தது, அமை வுடையதே என்பதை நன்கு அறியலாம். அகப்பணிபுரிவோர் அறிவித்தும் மேலும் ஆருரர் வினவ, இனியும் மறைத்தல் ஏதம் என்று உணர்ந்து, உதிரம்சோர் வடிவுகாட்டினர். உண்மை உணர்ந்த