பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையை மங்கலம் ஆக்கிய மடங்தை 127 வன்ருெண்டர் தாமும் இறக்கத் துணிந்திட்டார். அது போது இறைவர் அருளால் கலிக்காமர் உயிர் பெற் றெழுந்து, நம்பியாரூர் மாயாவண்ணம் வாளும் கையும் வளமாய்ப் பிடுத்துத் தடுத்திட்டார். அங்கிருந்தார் யாவரும் இவ்வதிசயம் கண்டு இன் புற்ருர் ஏயர் கோனும் எழிலார் கோனும் வன்பு நீங்கி அன்புகொண்டு ஒருவரை ஒருவர் தாழ்ந்து உயிர் ஒன்ருற்ைபோலப் புல்லிகின்ருர். ' ர்ே கிழிய எய்த வடுபோல மாறுமே சீர் ஒழுகும் சான்ருேர் சினம் ' என்பதுபோல ஏயர் கோர்ை சீற்றமும் தணிந்தது. கலிக்காமர் தேவியார் அவல நிலையினும் கவலை காட்டாது கண்ணுதல் அடியாரை அன்புடன் போற் றிய பயனன்ருே வன்பும் அன்பாக மாறியது. மரு ளும் தீர்ந்து அருளும் திகழ்ந்தது. ஏயர் கோனர் ஏந்திழையார்பால் நற்பண்புகள் பலவும் இலகியதால் அன்ருே நல்லார் என்னும் நல்லபெயர் மாதர் இனத் திற்கே உரியதாயிற்று. இவ்வம்மையாரை அவல நிலையினும் கவலே காட்டாதவர் என்றும் மனயை மங்கலம் ஆக்கிய மடங்தை என்றும் பன்முறை கூறிப் பாராட்டுவோமாக.