பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 129 தது. காடெல்லாம் கழைக் கரும்புகளும் மாடெல்லாம் கருங்குவளைகளும், வயல் எல்லாம் நெருங்கு வளை களும் மலிந்திருந்தன. ஆண்டு விளையும் நெல்லின் வளர்ச்சி இம்மைப் பயனுடன் அம்மைப்பயனும் அறி விப்பனபோல் வளர்ந்திருந்தன. இதனைச் சேக்கிழார் பத்தியின் பாலராகிப் பரமனுக் காளாம் அன்பர் தத்தயில் கூடினர்கள் தலையினல் வணங்கு மாபோல் மொய்த்தள்ே பத்தியின்பால் முதிர்தலே வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம். என்று வியந்து பாடுகிரு.ர். இம்மாண்புடைப் பதியில் வாழும் மக்கள் பண் பும் மாட்சியுற்றிருந்தது. பழியஞ்சிப் பாத்துண்ணும் பழக்கமே உடையராய் வாழ்ந்தனர். பகடு கடந்த கூழினை அரசுகொள் கடன் அளிப்பார். மிகுதி கொண்டு அறங்கள் பேணுவார். பரவரும் கடவுள் போற்றுவார். குரவர், விருந்தினர்க்கும், கேளிர்க்கும் விரும்பிக் கொடுப்பர். ஈண்டுச் சேக்கிழார், வள்ளுவர் கூறிய 'தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்னும் ஐம்புலத்தா ருேம்பல் தலே " என்னும் குறளில் காணும் தென் புலத்தார் என்னும் தொடர்க்குக் குரவர் என்று பொருள் கண்டனர். இப் வியப்பும் விருந்தும் உடைய பொருள், எப்புலவர் களும் எழுதாப் பொருள். வள்ளுவர் பெருமான் உள் ளிய பொருள். இக்குறட்குப் பொருள் கூறவந்த பரி மேல் அழகர் தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் கூறி, விரிவுரையின் கண்ணே, பிதி ரர் ஆவார், படைப்புக்காலத்து அயனல் பட்ைக்கப்