பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 181 பிள்ளைத் தமிழைத் துண்யாகக்கொள்ளின் அது சாலப் பொருத்தம் உடையதாகும். இது கிற்க. இக்காலத்தில் ஆங்காங்குப் பூங்கா அமைத்துப் பொதுமக்கள் சுகாதாரப் பொறுப்பைக் கண்ணும் கருத்துடன் நகராண்மைக் கழகம் ஏற்றுவருவதைக் கண்டு நாம் கனிவியக்கின்ருேம். இச்செயலைச் சோழ நாடு அக்காலத்திலேயே சோர்வின்றிச் செய்து வந் தது. காவளர்த்தும் செய்குன்றம், செய்குளமும் செழிக்க வளர்த்தும் வளம்படுத்தியது. இத்தகைய தான பல சிறப்புக்களைப் பெற்றது சோழ நாடு. இக்காட்டிற்குத் திலகமெனத் திகழ்வது திருவா ரூர்த் திருப்பதியாகும். இது சோழர் குலமன்னர்கள் தலைநகரம் ஐந்தனுள் ஒன்று. பிறக்க முத்திதரும் தலமுமாகும். இச்சிறப்புப் பற்றியே ' திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்” என்ருர் முனைப்பாடி காதர்ை. இது தொன்மைமிக்க தொல் பதியில் ஒன்ருய் ஒளிர்வது. மன்னு மாமலராள் வழி பட்டது. ' திருவாரூர் தேர் அழகு ' என்னும் முது மொழியேற்றுத் திகழப்பெற்றது. திருமுறை ஒசை என்றும் இருத்தலின், கிள்ளேபாட அதனைப் பூவை கள் கேட்டின்புறும் இயல்பினது. மலர்மகட்கு வண் தாமரைபோல் மலர்ந்து அலகில் சீருடை அழகுடைப் பதி இஃது எனில், இதற்குமேல் என்னே அறைதல் வேண்டும் ? இன்னோரன்ன எழிலுடைப் பதியில் பிறந்த வரே, பரவையார் என்னும் பாவையார் ஆவர். இவ் வம்மையார் குடியை உருத்திர கணிதையுர் குடி என அழைப்பர். பரவையார், விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப அழகுசெய் தவத்தால்