பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 188 டையவர் ஆதலின், அவரும் கமலேக் கண்ணுதல் கழ லிணைப் பரவிப்பணியப் போந்திருந்தார். நற்பெரும்பான்மை தன்னல் பரவையாரைப் பாவலர்ப் பெருந்தகையார்பார்த்திட்டார். கண்டதும் அவரை மணக்கக் காதல்கொண்டவராய்க் கனிவாய் திறந்த், - கற்பகத்தின் பூங்கொம்போ? காமன்தன் பெருவாழ்வோ? பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதியூத்த விரைக்கொடியோ? அற்புதமோ? சிவன்அருளோ? அறியேன்என்று அதிசயித் - தார். அகச்சுவையும் புறச்சுவையும் ஒருங்கே அமைந்த திருப்பாடல் இது. ஈண்டு ஆசிரியர் மிகுந்த விழிப் புடன் பாடியதோடமையாது, இலக்கிய இலக்கண மரபும் வழுவாது பாடிய பண்பு சிறப்புடையதாகும். இறைவர் கழலே எண்ணும் மனமுடை அறிஞர் கோயில்வந்த கோதையாரை விரும்பல் குற்றமுடைய செயல் என்று சிலர் கூறக்கூடும் என்பதை உளம் கொண்டு, ' இருவரும் பின்னல் மணக்க இருக்கின்ற னர். அவர் மணத்திற்கு ஆகூழ் ஆதரவாய் உள்ளது.” என்பதை முன்கூட்டி, நம்பியும் கங்கையும் சந்திக்குங் கால், நற்பெரும் பான்மை கூட்ட' என்னும் கற்ருெட ரைப் பெய்துகொண்டார். மேலும், நாவலூர்ப் பெருங் தகையோர் போன்றவர் இம்மை இன்பத்தில் ஈடுபடு பவர் ஆயினும் அம்மை இன்பத்தை இழக்கும் வண் ணம் எதையும் புரியார். எத்தொழிலைச் செய்தாலும் எதவத்தைபட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்பது மூதறிஞர் கருத்து. நின்மல ஞானம் இல்லவர்நாடுகளில் புக்குழன்றும் காடுகளில்