பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கு கந்த கங்கைமார் 139 பொன்னும் மெய்ப்பொருளும் தருவானேப் போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னே என் பிழையைப் பொறுப்பானேப் பிழையெலாம் தவிரப் பணிப்பானே இன்ன தன்மையன் என்றறிஒண்ணு எம்மான எளிவந்த பிராஅன அன்னம் வைகும் வயற்பழனத் தணிஆ ரூரானே மறக்கலு. மாமே. என்னும் மறப்பரிய உறுதியுடைய மனத்தினராய் மகிழ்ந்துறைவார் ஆயினர். இல்லறத்திற்கு வேண்டிய காசும் தூசும் சாலச் அமைத்து எங்குமுளத் திருப் பதிகள் தொழும் அன்பால் சுந்தரர் புறப்பட்டார். முனைப்பாடி நாதர்ை பலபதிகள் பணிந்து கொண்டு ஒதமுலவும் ஒற்றியூர் வந்து அடைந்தார். ஆங்கு ஒர் அணங்கின் அழகில் ஈடுபட்டவராய் அவ வம்மையாரையும் மணந்தார். இம்மண்த்தின் வர லாறு பின்பு சங்கிலியார் வரலாற்றில் கூறப்படும். விரிவை ஆண்டுக் காண்க. திருவொற்றியூரில் பன்னாள் பயின்றிருந்தபின், திருவாரூர் வந்துற்ருர். வந்தவர் பூங்கோயில் புனிதர் தாள்போற்றிப் பரவையார் இல்லம் போதருங்கால், அம்மாதரார் இவரை வரவேற்க மறுத்திட்டார். காரணம், கம்பியார் தம்மைத் தணந்து வேருேரு தழை பூங்கோதையைத் திருஒற்றி மாநகர்க்கண் மணந்ததேயாகும். சுந்தரர் பெருந்தகையார் மேலோர் சிலரை இப்பிணக்குத்திரப் பேசவிட்டனர். எவர் போய் உரைப்பினும் ஏந்திழையார் ஏற்றிலர். எதை இழக்க எண்ணினும் எலவார் குழலினர் தம் வாழ்வைப் பிறர்கொள்ள என்றும் இசையார். இஃது அவர்கட்கு இயல்பு. அன்னர் கற்பின் திறத்