பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 141 டாரோ? அவ்வடிவழகில் நீர் ஈடுபட என் உள்ளம் விழைந்திலது. ஆதலின், நீரும் செல்லல் இயலாது. என்றேன். இதுவே காரணம்." என்று எடுத்து இயம்பினர். இக்கருத்தினைச் செவ்வன் அமைத்துத் திரு. மாயூரம் ஒவியர்நீள் சுவர்எழுதும் ஒவியத்தைக் கண்ணுறுவான் தேவியையாம் அழைத்திடஆண் சித்திரமேல் யான்பாரேன் பாவையர்தம் உருவெனில் நீர்பார்க்க மனம்பொறேன் என்ருள் காவிவிழி மங்கைஇவள் கற்புவெற்பின் வற்புளதால். என்று பாடியுள்ளார். இச்சீரிய கற்பின் திறத்தை என்னென்று இயம்புவது ! காதலன் ஒருவன் தன் காதலியை நோக்கி ' எல் லாரினும் உன்மீது வைத்த காதலே எனக்குச் சீரியது என்றதும் வருந்திய தலைவியரும், 'இப்பிறப்பில் எக் காரணம் கொண்டும் பிரியேன் ' என்று கூறியதால் கண்ணிர் வடித்து, அடுத்த பிறவியில் பிரிவீர் போலும் ' என்று வருந்திய வனிதையாரும், பிரிந்து சென்று மீண்ட தலைவன் 'அடிக்கடி உன் நினைவா கவே இருந்தேன்' என்று கூறிய கணவனிடம், 'ஏன் மறந்தீர்?' என்று ஊடிய உத்தமிமார்களும் அன்ருே தமிழ்நாட்டுத் தலைவிமார்கள். இவர்களின் தன்மைகளை அன்ருே வள்ளுவனர், யாரினும் காதலம் என்றேன ஊடினள் யாரினும் யாரினும் என்று இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனக் கண்ணிறை நீர்கொண் டனள் உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றெம்மைப் புல்லாள் புலத்தக்க னள். என்று விளக்கிக் காட்டியுள்ளார் ? இவ்வாறு, இருக் கையில் தம்மை மணந்த கணவனைப் பிறர் மணக்க