பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கம்பிக் குகந்த கங்கைமார் செயல். அதனே' அறவே கடிந்து ஒழித்தல் கடன் என்பதைத் தாம் உணர்ந்தே இங்ங்ணம் கூறினர் என்க. ஆடவர் இரு மாதரை மணத்தல் இயல்பு அன்று என்பது அக்காலத்தும் அமைந்த நீதி என்க. தூதுவர் மீண்டு போதுவாராகிச் சுந்தரர்க்கு நடந்தவண்ணம் கவின்றனர். தம்பிரான் தோழர், தம் பிரான் மாற்றம் கேட்டு உள்ளம் தடுமாற்றம் உற் ருர். ' ர்ே எம் இருவரையும் இணைத்திலிர் எனில், என் னுயிர் உடலில் நில்லாது ஏகும்.” என்று இசைத்திட் டார். இறைவர் மீண்டும் பரவையார் இல்லம் நோக் கிச் சென்றனர். அம்மையார் அகம் இளகியது. 'அன் பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீராகில் என் செய் வல் இசையாது? ' என்று கூறித் தம் இசைவைப் வெளிப்படுத்தினர். இதனை நம்பிக்கு காதர்ை மொழிய காவலூரர் பரவையார் மாளிகையை கண்ணினர். ஊடற்கட் சென்ற உள்ளம் அது மறந்து கூடற்குச் சென்றது. எழுதுங்கால் கோல் காணுக் கண்ணே போல் கொண் கனக் கண்டபோது பழிகாணுதவர் ஆயினர். எனவே, கொண்கரை வரவேற்கச் சிறப்புப்பணி பலவும் செய் தார். கெய்வளர் வளக்குத் தூபம் நிறைகுடம் கிரைத்துவைத்தார். பூமலி நறும் பொற்ருமம் புனே மணிக் கோவை காற்றினர். தோகையர் வாழ்த்தத் தாமும் மாமணிவாயில் முன்பு வந்தெதிர் ஏற்க நின்ருர். தண்டளிர்ச் செங்கை பற்றிக்கொண்டு மாளிகையுள் சார்ந்தார். ஒருவரை ஒருஓர் உள்ளத்தால் பருகி ஒருவருள் ஒரு வர்மேவும் கிலேமையில் உயிர் ஒன்ருனர். பிரிந்தவர் கூடினல் பேசவும் வேண்டுமோ ?