பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் J盔莎 இன்னணம் இருவரும். தம்முள் கலிக்தி'இன்பின தாய்,வாழும் நாளில், கழறிற்று அறியும்.பெருமானும் அரசர் பெருமான் ஆர்வமொடு அந்தணர் பெருமான் அழைப்பிற்கிணங்கிப் பரவையார் இல்லம் படர்த் லுற்ருர். பரவையார் என்னும் பூவையாரும் எதிர் கொண்டழைத்து இருவர்க்கும் திேவழுவா. ஒழுக் கத்து நிறைபூசனைகளை முறையாகச் செய்தார். கறி யும் போனகமும் சமைப்பித்து இயல்பின் விருந்தும் அளித்திட்டார். பரவையார் மாளிகை பணத்தில் குறைவின்றிப் பல்கியதால் சிறப்புக்கொன்றும் குறைந்திலது. சேரர் பிரானுக்கும் ஆரூர் பிரானுக்கும் உணவு பரிமாறப்பட்ட விதத்தைச் சேக்கிழார், ‘பரிகலங்கள் ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியா ஏற்றுதலும்,' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறியது இக்கால நாகரிகப்படி தேர்ே விருந்துகள் திருமாளிகைகளிலும் திகழ்பூங்காக்களிலும் கடக்கும் திறத்தை நினைப்பிப்பது போன்று உள்ளது. மற்றுமொரு மாண்புடைய கருத்தையும் ஈண்டே உணர்வோமாக. இக்கால காகரிகத்தில் சாதி, மத வேறுபாடு இன்றி உடன் உண்ணும் சிறப்பு (inter dining) மிக்க சிறப்பெனக் கருதப்பட்டு வருகிறது. இது நம்முன்னேர்க்குப் புதுவதன்று பழமையா னதே. ஈண்டு அரச குல அன்பராம் சேரரும், அந்தண குல. அன்பராம் ஆரூரரும் ஒருங்கு இருந்து உணவு கொண்டதை உணர்க. முன்னர் அந்தண மரபின ரான அப்பூதி அடிகளாரும் வேளாளர் குல திலக ரான அப்பர் பெருமானும் ஒருங்கு அய்ர்ந்து உணவு கொண்டதையும் உளங்கொளல் வேண்டும். இங் 10