பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நம்பிக் குகந்த கங்கைமார் என்னும் ஒண்புகழுடையது. அதனைப் பூலோகச் சிவலோகம் என்று புலவர் கூறுவர். இதற்கு அண் மையதாக ஞாயிறு என்னும் ஒரு பதியுண்டு. இப்பதியின்கண் வேளாண் குடியினர் பலர் வாழ்ந்துவந்தனர். அவருள் ஞாயிறு கிழார் என்னும் கல்லோர் ஒருவர் நலனுற வாழ்ந்துவந்தார். அன்னர் ஆற்றிய அருந்தவப் பயனுல் அவர்க்கு ஒர் அருமை மகளார் பிறந்தனர். அம்மகளார் பெற்ருேர் போற்ற வளர்மதிபோல் வளர்ந்து வருவாரானர். இறையன் பும் இம்மகளார்பால் இளமை முதலே வளரலாயிற்று. இம்மகளார் சங்கிலி என்னும் நன்மைம் சூட்டி அழைக்கப்படலாயினர். சங்கிலி என்பது பிள்ளைத் திருநாமம் என்று பேச இயலாது. இஃது ஒரு புனை பெயராகவே இருத்தல் வேண்டும். இவ்வம்மையார் எதையும் ஐயம் திரிபற அறிந்து சங்கை இன்றி இருந்தகாரணம் பற்றிச் சங்கையிலி என்பது மரு விச் சங்கிலி யாயிற்ருே என்று நாம் யூகிக்க இடன் உண்டு. ஆதன் தந்தையார் என்பது எப்படி நாள டைவில் ஆந்தையார் என்று ஆயதோ, அதுபோலவே, இதுவும் ஆயிற்ருே என்று ஐய்றுதலின் யாதோர் இழுக்கும் இன்றென அறிக. இம்மகளாரை, மலே யான் மடந்தை மலர்ப்பாதம் மறவா அன்பால் தலே யாம் உணர்வு வந்தணையத் தாமே அறிந்த அறிவுடை யார்' என்று சேக்கிழார் கூறுதலின், எல்லாம் அறிந்த காரணத்தால் ஐயம் இலராய் இருந்தனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாய் கிற்கும் என்க. ஆகவே, சங்கில்யார் என்னும் பெயர் இவர்க்குக் கார ணக் குறி என்று கொள்ளலாம்.