பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 151 அப்பன் திருத்தளியடைந்து வரங்கிடப்பேன். அதற்கு வாய்ப்புத் தருவீராக ' என்று தாழ்ந்து பணிந்து புகன்றனர். கன்னிப் பெண் இவ்வாறு கழறுவதைக்கேட்ட ஈன்றவர், அயர்வும் அச்சமும் அற்புதமும் எய்தினர். இன்பம் துய்க்கும் இளமையில் இறையருள் நாடும் தன்மைகண்டு வியப்பும், கன்னிப்பருவம் வாய்க்கப் பெற்ற காரிகையாளைத் தனித்து ஒற்றியூர்க் கோயி லில் விட்டுவைத்தல் யாங்கனம் இயலும் என்பதல்ை அச்சமும், தம் திருமகளார் விரும்பும் வண்ணம் அம் மணுளன் வாய்க்கப் பெறுவானே ? வாயாது அமை வானே ? என்னும் எண்ணத்தால் அயர்வும் கொண் டனர். தம்மகளார் மாற்றத்தை மறைத்து ஒழுகினர். அவனி அறிய அறைந்திலர். இம்மூவர்க்கிடையே இச்செய்தி அம்பலாக இருந்ததே அன்றி, அலராக அலர்ந்திலது. இந்நிலையில் ஞாயிறுகிழார் ஞாதியரில் ஒருவன் தனக்குச் சங்கிலியாரை எவ்வாறேனும் மணம் முடிக்க முதியோர் சிலரை விடுத்தனன். வந்தவர் தம் கருத்துக்கூற், ஞாயிறுகிழார் அவர்கட்கு உண்மை யாதும் உரையர்து, அவர்கள் முகக் குறிகொண்டு முன்னத்தின் உணர ஏதம் எய்தா வகை மொழிந்து வழிகூட்டியனுப்பினர். ஏதம் எய்தா வகை மொழிந்து என்பதல்ை ஞாயிறு கிழார் சொல்வன்மை படைத்த தூயர் என்பதும், இன்சொல் வழங்கும் இதயம் உடை யவர் என்பதும் அறியக்கிடக்கின்றன. மேலும், அன் ர்ை, ' இன்சொலால் ஈரம் அளே இப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' என்பதற்கோர் எடுத்துக்காட்டாய் இலகினர் என்பதும் பெற்ரும்: