பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நம்பிக் குகந்த கங்கைமார் தையும் தணவா வகைக்கு ஒரு சபதம் செய்யச் செய் வோம்' என்று சாற்றி, தாய்முகங் காணச் சேய் கிற் பதுபோல் இருந்த சுந்தரர் இடம் போந்து நடந்த வண் ணம் நவின்றனர். இறைவர் கூறிய மொழிகேட்ட இன்தமிழ் ஆளி யார் சிறிது இடர் உற்றனர். கோயில் பல சென்று கும்பிடு கடனுடையார்க்கு இச்செயல் பெருந்தடை யாமே என்று எண்ணினர். பின்பு ஒருவாறு மனங் தேறிச் சங்கரர் தாள் பணிந்து இரந்து, மங்கையவள் சபதம் செய்ய வந்தக்கால் திருக்கோயிலில் இல்லாமல் திருமகிழின் கீழ் இருக்குமாறு வேண்டினர். அன்பு வேண்டும் அரருைம் அவ்வாறே செய்ய இசைந்தார். ஈண்டுச் சில தடைகள் எழ ஏது உண்டு. இறை வர் இயல்பு பார்க்கும் இடம் எங்கும் ஒருக்ேக மற நிறைந்த பரிபூரணுனந்தமாகும். அங்கு இங்கு எதை படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய் அரு ளொடு நிறைந்தது. அத்தகைய பொருள் கோயிலில் தான் உண்டு. மரத்தின்கீழ் இராது என்று யாங்ங்னம் எண்ணுவது ? அவ்வாறு எண்ணின் இறைவனது இறைமைப் பண்பிற்கு இழுக்கு நேரும் அன்ருே ? இதனை உறழ்ந்த கல்வியுடையராம் நம்பிஆரூரர் எண் னிலரோ ? எண்ணி இருப்பின், இறைவரை, நீர் மகிழ்க் கீழ் இரும் ' என்று வேண்டுவரோ எனில், அவர் அங்ங்னம் கூறியதில் குற்றம் இல்லை. இறைவ துை எங்கும் நிறைந்த தன்மையைச் சிலரே அறிவர். பலரும் பரமன் திருக்கோயிலில் இருப்பவனென்றே பகர்வர். இறைவர் எங்கும் இருப்பவர் என்பதை உணர்வரேல் மக்கள் கும்பிடும் கொள்கையைச் செல் லாறுதோறும் செய்தல் வேண்டும். அவ்வாறின்றிக்