பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வனிதையர் வயங்கிய காலம் இதுகாறும் கூறப்பட்ட ஏந்திழைமார்கள் புராண காலத்துப் பூவையர்கள் போலும் என்று புகலத்தக்கவர் அல்லர். தண்டமிழ் நாட்டுத் தனிப் பெருங்குடி மக்களே ஆவர். இவர்கள் வாழ்ந்த காலம் வரலாற்று நூல்கட்கு உட்பட்டு உணரவல்லதாக உள் ளதே அன்றி, வரலாற்று நூல்கட்கு அப்பாற்பட்ட தன்று. இனி இங்கு, விதந்து ஒதப்பட்ட ஒண்டொடி மார்கள் எவ்வெக் காலங்களில் இலங்கியவர்கள் என் பதை இனிதின் உணர்வோமாக. அழகைத் துறந்த அணங்காம் புனிதவதியார் என்னும் காரைக்காற் பேயார் ஆளுடைய அரசர், ஆளுடைய பிள்ளையார் ஆகிய இருவர்கட்கும் முற் பட்டவர் என்பதைத் தொண்டர் சீர்பரவுவார் தம் தொண்டர் புராண வாயிலாகத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளார். ஞானபோனகர் தமது தலயாத்திரை யின்போது, தொண்டை நாட்டைத் தொழுது கொண்டு வருகையில், திருவாலங்காட்டிற்குச் சென்று அண்டமுற கிமிர்ந்தாடும் ஆலங்காடனே வழுத்த அப்பதி நோக்கி வந்தனர். அப்பதி அம்மை யாம் காரைக்காற் பேயார் தம் கால்கொடு நடவாது தலைகொடு கடந்து சென்று போற்றப்பட்டதாக அறிந்து, அப்பதியைத் தாம் காலால் மிதிக்க அஞ்சிப் பக்கத்தில் இருந்த ஒரு சிற்றுாரின்கண் தங்கினர். இக் நிகழ்ச்சிகளைக் கவிஞர் பெருமான் சேக்கிழார் குறிப் பிடுகையில்,