பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வனிதையர் வயங்கிய காலம் காட்டுக்கு எழுந்தருளிய விதத்தின் சிறப்பியல்பினைத் திறம்பட இயம்பலானர். இக் குறிப்பினின்று பால ருவாயர் பரமனர் பதியாம் திருவாலங்காட்டை மிதிக்க அஞ்சிக் கோயில்புகாது அயலே தங்கியதற்கு அம்மையார் சென்னியால் நடந்த பதி என்பதே கார் ணம் என்பது புலகிைறது. இதல்ை புனிதவதியா ராம் காரைக்கால் அம்மையார் தமிழ் விரகராம் திருஞான சம்பந்தருக்கு முற்பட்டவர் என்பது ஐயம் திரிபற அறியக்கிடக்கின்றது. திருஞான சம்பந்தர் வரலாற்றிலும் திருநாவுக் கரசர் வரலாற்றிலும் இருவரும் பற்பல பதிகட்குத் தலேயாத்திரை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாண்டக வேந்தர் தழைத்த காலம் முதலாம் மகேந் திரவர்ம பல்லவகிைய குணபரன் இருந்த காலமாகும். அதாவது கி. பி. 600 முதல் 630 என்பது கல்வெட் டால் காணக்கிடைக்கும் வரலாற்றுக் குறிப்பாகும். மேலும், தோணிபுரத் தோன்றல் சிறுத்தொண்ட காய ரைால் வரவேற்கப்பட்டு கன்முறையில் உபசரிக்கப் பட்டார் என்பது ஞானபோனகம் உண்டார் வரலாற் றிலும், சிறுத்தொண்டர் வரலாற்றிலும் சேக்கிழார் பெருமான் செம்மையுறச் செப்பியுள்ளார். கெளனி யர் கோருைம் தம்மை அழைத்துத் தலையன்பு காட் டிய சிறுத்தொண்டரது அன்பின் திறத்தைப் பாராட் டித் தம் திருச்செங்காட்டுத் திருப்பதிகத்தில், "பைங்கோட்டு மலர்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டங் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே. என்று பாடியுள்ளார்.