பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனிதையர் வயங்கிய காலம் 165 சிறுத்தொண்டரது இயற்பெயர் பரஞ்சோதி யார் என்பது. இவர் முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னனிடம் தானத் தலைவராய்த் திகழ்ந்தவர். இவர் தம் மன்னன் பொருட்டுச் சாளுக்கிய மரபு மன்னனை இரண்டாம் புலிக்கேசியை வெல்ல, வாதாபி நகர்க்குப் படை எடுத்துச் சென்று வெற்றி கொண்டதைச் சரித்திரம் சாற்றுகின்றது. இக்குறிப் பினை வாதாபி நகர்க்கண் உள்ள கல்வெட்டுக்களும் கழறிக் கொண்டிருக்கின்றன. இவ்வெற்றி பல்லவனு டைய வெற்றியாதலின், அன்ன்ைபுகழை அறிவிக்கும் கல் வெட்டுக்களும் களங்கமின்றிக் கழறிக்கொண்டுள் ளன. இரண்டாம் புலிகேசி வயங்கிய காலம் கி.பி. 7ஆம் நூற்ருண்டு என்பது வரலாற்று முறையில் காணப் படும் வாய்மையாகும். இவ்விரு வரலாற்றுக் குறிப் புக்களில்ை தாண்டக வேந்தரும் சிறுத்தொண்டரும் தழைத்த காலம் கி.பி. ஏழாம் நூற்ருண்டு என்பது வெள்ளிடை மலேயென விளங்காநிற்கிறது. இவ் விரு பெரியார்களுடன் தொடர்பு கொண்ட தண்ட மிழ் விரகராம் திருஞான சம்பந்தர் நிலவிய காலமும் கி. பி. ஏழாம் நூற்ருண்டு என்பதில் எள்ளளவும் ஐய மின்று. ஆகவே, அழகைத் துறந்த அணங்காம் புனிதவதியார் காலம் பாலருவாயரது காலமாகிய கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முற்பட்டது என்பது அங்கையில் நெல்லிக்கனியென அறியக்கிடக்கிறது. மேலும், காரைக்கால் அம்மையார் திருவாய் மலர்ந்த திருப்பாடல்களாக உள்ளவை, அற்புதத் திரு வந்தாதி, இரட்டை மணி மாலை, மூத்த திருப்பதிகம் என்பன. திருப்பதிகம்.என்னும், திருப்பெயர் மூவர் முதலிகள் மொழிந்த திருப்பாடற்குகளிய ஆெயராக