பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனிதையர் வயங்கிய காலம் 169 ஆளுடைய நம்பிகளாம் சுந்தர் காலத்து அர சன் தந்திவர்ம பல்லவன் என்பது வரலாற்று நூலின் துணிபாகும். இவன் கி.பி. 780 முதல் 880ஆம் ஆண்டு வரையில் இலகியவேந்தனவான். எனவே, இவனது காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு என்று கூறு வதில் இழுக்கொன்றும் ஏற்பட்டுவிடாது. தந்தி வர் மன் மகன் இரண்டாம் நரசிம்ம வர்மன் ஆவான். அவனையே சுந்தரர் காடவர்கோன் கழற்சிங்கன ' என்று கூறுகிருர் என்ருலும், அவன் காலமும் 9ஆம் நூற்ருண்டே என்க. ஆகவே, இவன் காலத்தவரான சுந்தரர் காலமும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு என் பது உறுதியாயிற்று. இன்னமும் இக்கால நிலைகளே மற்றும் பல்லாற் முனும் பல்வேருன சான்றுகளைக் காட்டி நிறுவ முயன்ருல், அது பரக்குமெனக்கருதி இந்த அளவில் இது சுருக்கப்பட்டது. இதன் விரிவை இன்னமும் விளக்கமுற அவாவுவோர் வரலாற்று நூற்களில் மேலும் பரக்கக் காண்பாராக. துாக்குச் சீர்திருத் தொண்டத் தொகைவகை வாக்கி ல்ைசொல்ல வல்லபி ரான்னங்கள் பாக்கி யப்பய னய்ப்பதி குன்றைவாழ் சேக்கி ழானடி'சென்னி இருத்துவாம். -சிவஞான முனிவர்.