பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனர் விரதம் காத்த காரிகை 51 பதியில் பரஞ்சோதியார் என்னும் பண்பாளர் ஒருவர் வாழ்ந்து வந்தனர். அன்னர் மாமாத்திய குலத்தவர். இவர் வடநாற் கடலுள் கன்கு ஆழ்ந்து திளேத்தவர். ஆயுள் வேதமருத்துவத்தில் அளவிலாப் பயிற்சி பெற்றவர். இவற்ருேடு படைக்கலப் பயிற்சியும் பண்புறப் பயின்று இருந்தார். கரியும் பரியும் கலங் காது ஏறி அவற்றைக் கடாவும் தொழிலிலும் காசற்று விளங்கினர். ' கற்றதனல் ஆய பயன்என்கொல் வாலறிவன் கற்ருள் தொழாஅர் எனில், ' என்னும் வள்ளுவர் வாக்கிற்குத் தாம் இலக்காதல் கூடாது என்ற காரணத்தால் பரஞ்சோதியார் பலகலை களேயும் பளகு அறப்பயன்றிருந்தும் பரமன் திருவடி களில் பற்றுமிக உடையராய்ப் படிப்பின் பயன்வால் அறிவன் கற்ருள் தொழுதலே என்று அத்திருவடி களைப் பரவி வருவாரானர். இதனைச் சேக்கிழார் பெரு மான் வாக்காலும் உணரலாம். உள்ளங்றை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்ருல் தெள்ளுவடித் தறிந்தபொருள் சிவன் கழவில் செறி வென்றே கொள்ளும்உணர் வினில்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடை யாய் என்றும் பயின்றுவரும் பண்புடையார் பரஞ்சோதியாரது பரந்த புலமையையும் படைக் கலப் பயிற்சியின் மேம்பாட்டினேயும் அறிந்த முத லாம் நரசிம்ம வர்ம பல்லவன் இவரைத் தமக்கு அணுக்கராய் அமைத்துக்கொண்டு இவர் ஏவல்வழி காவல் புரிந்து வந்தான். அறிவுடையோன் ஆறு அரசு செல்லும் ' அன்ருே !