பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனர் விரதம் காத்த காளிகை 53 புக்கு அரசு அடிபணிந்துதான் ஆகவேண்டும். அவற்றை ஏற்றுப் பரஞ்சோதியார் ' இதுவும் பர மனர் செயலேபோலும்" என்று எண்ணியவராய்த் தம் உள்ளத்தால் பரவி மன்னர் மன்னரே ! யான் என் கடமைகளைச் செய்தேனே அன்றி வேறன்று ” என்று சொல்லித் தம் இல்லம் போந்தார். - பரஞ்சோதியார் வாழ்ந்த திருச்செங்காட்டங்குடி யில் கணபதிச்சரம் என்னும் ஒரு திருத்தளியுண்டு. அங்குள்ள பரமனை நாளும் பரவி மெய்யடியார்க்கான பணிகளைப் புரிந்து வந்தார். இவர் கொண்ட திருத் தொண்டு தீதின்றி முடிய இவர்க்கொரு வாழ்க்கைத் துணைவியார் அமைந்தார். அவ்வம்மையார் திரு வெண்காட்டுநங்கை என்னும் திருப் பெயரினர். இத்தம்பதிகள் கருத்தொருமித்துக் களங்க மற்ற தொண்டர்களை முன்பு உண்பித்துப் பின்பு தாம் உண்ணும் நெறியில் பிறழாது ஒழுகி வந்தனர். தூயதிரு அமுதுகளிை கன்னல் அறு சுவைக்கறிகெப் பாயதயிர் பாலினிய பண்ணியம்.உண் ணிiஅமுதம் ஏயபடி யால் அமுது செய் விக்க மிசைத்தடியார் மாயிருஞா லம்போற்ற வருமிவர்பால் மனமகிழ்ந்தார் இவையே தொண்டர்க்கிட்ட உணவு வகையாகும். இவ்வாறு பெருவுணவு அளித்துப் பெருங் தொண்ட ராய் இருந்தும், சிறுத்தொண்டர் எனும் பேரே சிறப் புடனே பெற்று வந்தார் எனில், இவர் தொண்டின் மாண்பினை என்னென்று சொல்வது! இவர்கள் மனே மாட்சியின் மங்கலத்திற்கு நன்கலமாக நன் மக்கட் பேற்றையும் நன்கனம் அமையப் பெற்றனர். அம் மகவுக்குச் சீராள தேவர் எனும் திருப் பேரும் சாற்றி வளர்ப்பாராயினர். சீராள தேவர் சீமந்த புத்திரர்