பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவை 27. சண்டு நாம் பெரியதோர் உண்மை காணுதல் வேண்டும். அதாவது மக்கள் தாம் பிறந்த சமய நெறியினின்றும் மாறுதல் கூடாது என்பது.அவ்வாறு செய்தல் ஆண்டவன் எண்ணத்திற்கும் ஆகாதது என்பது சிற்ந்த சித்தர் யோகர் துணிபாகும். திரு மூலர் ஒரு மாபெரும் யோகியர்; தனிப் பெருஞ் சித்தர். அவர் யாத்த பாடல்கள் திருமந்திரம் என்னும் பெய ருடன் சிறப்புற்று விளங்குகிறது. அப்பாடல்கள் மக் திரம் என்பதை எவரும்மறுக்க இயலாது. அம்மந்தி ரம் என்ன கூறுகிறது? மக்கள் ஒழுகலாற்றை மாண் புறக் கூறுகிறது. சமய மாற்றத்தை குன்கு கண்டித் துக் கழறுகிறது. தத்தம் சமயத் தகுதிகில் லாதாரை அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்கெறி எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே. ஆகவே, சமய மாறினரை என்னணமேனும் மீட் டுப் பண்டைய நெறியினர் ஆகச் செய்தல் நெறி யுடையோர் கடகுைம். வேற்றுச் சமயம் புகுந்தார் என்று விடவும் கூடாது. புகுந்தவர் மீண்டும் வர விருப்பம் கொள்ளின், அதனை வெறுத்தல் இன்றி ஏற்றல் வேண்டும். ஏற்கலாம் என்பதை விளக்கு வனவே சமண் புகுந்த அப்பரும், கூன்.பாண்டியனும் மீண்டும் சிவநெறி புக்கனர் என்று கூறும் வரலாறு கள். ஆகவே, இக் காலத்தவர் மதமாற்றம் உற்று மீண்டுவர விரும்பின், அவர்கட்கு இடம் தந்து ஏற்க வேண்டுவது கடகுைம். நெடுமாறன் திருநெறி மேற்கொண்டான். மறைய வர் வேள்விகள் மாருது நடந்தன. வானவர் மாரிகள்